உலகளாவிய நாடுகளில் வாழும் எனதருமை சகோதர-சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)
இரண்டுமாத இடைவெளிக்கு பிறகு கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளேன். இதற்கு முன் எழுதி அனுப்ப நினைத்த கட்டுரை - குழப்பங்கள் ஆரம்பமாவது எதனால் - என்ற தலைப்பில் எழுத நிறையநூல் தேவைப்படுகிறது.
அலி (ரலி) அவர்கள் காலத்தில் ஷpயா மற்றும் போரா போன்ற முஸ்லிம் இனம் குறித்து தகவல் ஷஹீஹூல் முஸ்லீம் நூலில் சேகரித்து இன்னும் பலநூல்களை புரட்டி படித்துக் கொண்டிருக்கிறேன். அதை எழுதுவதற்கு முன் நாட்கள் அதிகமானால் வாசகர்கள் என்னை மறந்துவிடக்கூடாது என்றும், அவர்கள் சிந்தனைக்கு புது விருந்து தரவே சின்னஞ்சிறு விசங்களின் சிறப்புகள் தலைப்பில் அனுபவம் தந்து உண்மை அதன் நன்மை குறித்து எழுதுகிறேன். இணையதளம் நடத்துவோர் எழுதிகொடுத்த கட்டுரையை பிரிண்ட் எடுக்க ஓர் இடத்தை பதிவு செய்தால் பக்கங்கள் பாராது விரிந்த ஆலமரம்போல் விழுதுகள் நிறைய விழச்செய்ய முடியும்.
எழுதும் கோல் (பேனா-பால்பாயிண்ட்) இப்படி உபயோகிக்கலாம்?
மசி(மை) ஊற்றி எழுதும் எழுதுகோல் (பேனா) மூலம் எழுதும் முறை வெகுவாக குறைந்து வருகிறது. பால்பாயிண்ட் பேனாவின் ஆதீகம் அதிகமாகிவிட்டது. இதில் ஜெல் அதி நவீன பால்பாயிண்ட் மற்றொன்று ரீபில் போட்டு எழுதுவது. இதை சட்டை பாக்கட்டில் தலை மாற்றி எழுதும் பகுதி கீழ் நோக்கி வைத்தால் அதே நிலையில் வீட்டில் வைத்தாலும் எடுத்த உடன் எழுதும். ஏனெனில் எழுதும் பகுதி தலை கீழாக வைக்கப்பட்டிருந்தால் உடனே எழுத முடியும். இது என் அனுபவம் கண்ட உண்மை. என்னை சந்திக்கிறவர்கள் என் பேனா தலைகீழாக இருப்பதை அடிக்கடி சுற்றிக்காட்டுவார்கள். ஆனால் ஜெல் ரக பேனா தலைகீழா வைக்கக்கூடாது. சட்டை பையை மார்டன் ஆர்ட்ஸ் ஆக்கிவிடும்.
எழுதும் காகிதத்தில் சிக்கனம் கடைபிடிப்போம் வாரீர்!!
கட்டுரை எழுத வேண்டுமானால் ஒரு பக்கம்தான் எழுத வேண்டும் என்பது பத்திரிக்கை துறை நியதி. அதனால் நான் எழுதும் கட்டுரைக்கு ஒரு பக்க விளம்பர பிரசுரங்களை ஜும்ஆ பள்ளி பிரசுரங்களை நிறைய சேகரித்து வைத்துள்ளேன். அதில் எழுதி வருகிறேன். வெள்ளை பேப்பர் வாங்கும் செலவு மிச்சம் ஆகிறது. கூடவே சிக்கனத்தை கடைபிடித்த சந்தோஷம் கிடைக்கிறது. இந்திராகாந்தி ஆட்சிகாலத்தில் சென்னை பேரூந்துகளில் 'சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டைக்காக்கும்' என்ற வரியை அன்று ஸிட்டியில் வாழ்ந்தோர் எல்லா மொழிகளிலும் படித்திருக்கலாம்.
எனக்கு இந்த மாதிரி ஒருபக்க காகிதத்தை தந்து உதவுபவர்கள் மூவர்.
(1) ரஹ்மானியா பள்ளி தலைமை ஆசிரியர் A.ஆசியா மேடம் அவர்கள்
(2) இக்ரா கல்விச்சங்க நிர்வாக அமைப்பாளர் A.தர்வேஷ முஹம்மது அவர்கள்
(3) மாஸ்டர் கம்ப்யூட்டர் பங்காளி மாலிக் அவர்கள்.
(சிறிய உதவி செய்தாலும் அதை நான் நினைத்து காலத்தோடு மறக்காமல் எழுதி காட்டுவேன்)
நான் யாருக்கும் உதவி செய்தாலும் அதை உடனே மறக்கடித்து விடும்படி இறைவனிடம் நான் கேட்டு மறந்துவிடுவேன். ஒரு பக்க காகிதத்தால் தயாரித்த சிறிய பாக்கட் டைரியை ஒருசமயம் சென்னை நகைக்கடை ஒன்றில் வணிகத்துறை அதிகாரி பரிசோதனை (ஐ.வு.ரெய்ட்) நடக்கும்போது சின்ன பாக்கட் டைரியை தவிர என்னை சோதனையிட்ட அதிகாரி ஒரு பாக்கட் டைரிகூட வாங்க முடியாதவர்களாக இப்படி பிரசுரங்களை சிறய டைரியாக்கி எழுதிவைத்திருப்பதை ஏளனமாக கூறினார். அதில் சென்னை நகைக்கடையில் கொடுத்த அப்ரூல் ஜெம்ஸ் கணக்கு எழுதி இருந்தேன். பிரசுர டைரி என்பதால் பெரிய சிக்கலில் இருந்து காத்தது. (அல்ஹம்துலில்லாஹ்...)
இரண்டு ஜோடிகள் ...
எப்போதும் நாம் அணியும் செருப்பில் இரண்டு ஜோடி இருந்தால் எங்கேயாவது செருப்பு காணாகிவிட்டால் உடனே கடைக்குபோய் செருப்பு வாங்க தேவையில்லை. வீட்டுக்கு போன் அடித்து காணாமல் போன செருப்பு குறித்து சொல்லி வீட்டில் வைத்திருக்கும் செருப்பை ஒருநிமிடம் கொடுத்துவிடச் சொல்லலாம். நான் அப்படி செய்வதுண்டு.
தஸ்தாவேஜுவை ஜெராக்ஸ் எடுத்து வையுங்கள்:
எல்லோரும் ரேஷன் கார்டுகள், பாஸ்போர்ட், வீட்டு பத்திரம் இவைகளை ஜெராக்ஸ் எல்லோரும் வைத்திருக்கிறோம். அதைபற்றி நான் சொல்ல வரவில்லை. வெளிநாடு பயணம் செய்வோர் தனது விமான பயணடிக்கட், ஊசிபோட்ட கார்டு அது சம்பந்தமான நமது கம்பெனி வேலை அத்தாட்சி கார்டு இவைகளை ஜெராக்ஸ் எடுத்து வைப்பதில்லை. நாம் இவற்றை கவனமாக வைத்திருந்தாலும் சில கவனக்குறைவால் கை நழுவிவிட்டால் ஏர்போர்டில் தடுமாறிப்போனவர்கள், பயணம் செய்ய முடியாமல் திரும்பி வந்தவர்களும் உண்டு.
ஏர்டிக்கட்டை ஜெராக்ஸ் எடுத்து வைக்க இலங்கை காலிநகரைச் சார்ந்த எனது வியாபாரிக்கு ஒருமுறை சொன்னேன். இரண்டு வாரங்களுக்குமுன் தனது ஏர்பயணடிக்கட் கைத்தவறிவிட்டது. ஏர்லைன்ஸ் அலுவலகம் சென்று திரும்பப்பெற இரண்டு நாள் ஆகிவிட்டது என்றார். அவர் ஜெராக்ஸ் வைத்திருந்தால் போதும் என்றார். அவர் என்று பதில் தந்தார்கள். உள்ளூர் ரயில்வே டிக்கட் ரிசர்வு பாரம் ஒன்றை அதிகமாக வாங்கி நமக்கு தந்த டிக்கட் தேதி இதர நம்பர்கள் இரண்டு பக்கம் உள்ளதை வேறு ரிசர்வு பண்ணிய காகிதத்தில் எழுதி வைக்கலாம்.
ரிசர்வு (முன்பதிவு) செய்த நாள் நேரம் பயணத்தேதி, ஆண், பெண் வயதைகூட மறக்காமல் எழுதிவைக்கலாம். இரண்டு பக்கம் இரண்டு ரூபாய் வீண் செலவு முன்பதிவு தாளில் எழுதி வைத்து பயணம் முடிந்த பின் வீடுவந்தபின் கிழித்து போலாம். அல்லது டைரியில் பத்திரப்படுத்தி வைக்கலாம். இதுபோலயோசனை சின்னஞ்சிறு தகவல் விசயங்களாக ஏராளமாக உங்கள் மனத்திரையில் போட்டு வைக்க விரும்புகிறேன். பொதுத்துறை பொறுப்பு தலைசுமையாக இருப்பதால் நேரமில்லை. குழப்பம் குறித்த அடுத்த கட்டுரைக்கு தகவல் தாருங்கள். முழுமையாக எழுத வேண்டும் என ஆசை.
|