செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அனைத்து காயல் நல மன்றங்களுக்கு கனிவான வேண்டுகோள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[04 June 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27757
கண்ணியமிகு அனைத்து அயல்நாட்டிலுள்ள காயல்நல மன்ற சகோதரர்களே அஸ்ஸலாமு அழைக்கும்!
கடந்த ஒரு வாரகாலமாக நமதூரைப்பற்றியும்,நம் உயரினும் மேலான புனித மார்க்கத்தின் அடிப்படையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை முறை பற்றியும்,மிகவும் இழிவாகவும்,ஏளனமாகவும்,எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பொருள்பொதிந்த வார்த்தைகளை அறிக்கையாக அமைத்து யாருக்கும் தெரியாமல் மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு வஞ்சகத்தனமாக DCW யின் துணைத்தலைவர் ஸ்ரீநிவாசன் அவர்கள் அனுப்பியுள்ளதை நம் KEPA அமைப்பு கண்டுபிடித்து நம் அனைவர்களும் தெரிந்து கொள்ள செய்தியாக வெளியிட்டு இருந்ததை நாம்அனைவரும் அறிவோம்!
அந்த துனைதளைவரின் அறிக்கையை பார்க்கும் எந்த ஒரு உண்மையான காயலரும், உண்மையான முஸ்லிமும் கொதிப்படையாமல் இருக்க முடியாது!
அந்த ஆலையினால் எண்ணிலடங்கா இன்னல்களுக்கும் நோய் நொடிகளுக்கும்,உயிர் இழப்புகளுக்கும் ஆளாகி,மென்மேலும் வேதனையில் வீறிடும் நம்மை நோக்கி அதே வெந்தபுண்ணில் மறுபடியும் வேளை பாய்ச்சுகின்றது இந்த நிர்வாகம்!
இதற்க்கு பதிலடி கொடுக்காமல் பெருந்தன்மை போர்வையில் நாம் செல்வோமேயானால், நாளைக்கி அந்த அயோக்கிய ஆலையின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை நம்மை எள்ளி நகையாடி என்ன சொன்னாலும் இந்த காயலனவோ கண்டுகொள்ளாத கேணய கூட்டம்தான். அவர்களுக்கு அவரவர்களின் சொந்த வாழ்க்கைவசதிதான் முக்கியம், நம்மை எதிர்க்கின்ற அளவிற்கு தைரியமும் திராணியும் இல்லை என்ற ஏளன வார்தைகள் முளைப்பதற்கு நிச்சியம் வழி உண்டாகிவிடும்!
ஆகவே முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்!
அன்பு அனைத்து காயல்நல மன்ற நிவாகிகளே,,
உடனேயே உங்கள் அமைப்பை கூட்டி இந்த DCW துணைத்தலைவர் ஸ்ரீநிவாசன் அறிக்கைக்கு எதிர்ப்பும் கண்டனமும் அடங்கிய அறிக்கையை தயாரித்து அதை தீர்மான வடிவமாக்கி வெளியிடுமாறு அன்புடனும்,
நமதூர் மானமும், மரியாதையும், இறையாண்மையும் என்றும் காக்கப்படவேண்டும் என்ற உறுதியில் காயலர்கள் கிஞ்சித்தும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணத்தில் வாழ்பவர்களில் நானும் ஒருவன் என்ற உரிமையோடு இந்த வேண்டுகோளை உங்கள்முன் வைக்கிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
பின் குறிப்பு:(இங்கிருந்து என்னுடைய எதிர்ப்பு பங்கை தெரிவிக்க முன்வருவேனேயானால், நமதூரில் இந்த ஆலைக்கெதிராக அனைத்து மக்களும், அனைத்து குடும்பங்கங்களும் போராட்டத்தில் குதிக்க முன்வந்தால், குடும்பங்களின் முதல் வரிசையில் என் மனைவியும், மக்களும் கலந்து கொள்வார்கள் என்ற உறுதியினை இங்கு தருகிறேன்)
செய்தி: ஆட்டோ ஓட்டுநர்கள் பெண்களிடம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்! ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனிதர்களில்தான் எத்தனை விதம் எத்தனை மனம்! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[09 January 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24957
காவல் துறையின் இந்த விழிப்புணர்வு கூட்டம் வரவேற்கதக்கது.இக்கூட்டத்திலேயே சிலர் சீருடை அணியாமல் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். அது அவ்வளவு நல்லதல்ல,நாம் செய்யும் தொழிலுக்குறிய விதி முறையையும்,மரியாதையையும் கடைபிடித்தாகவேண்டும்!
ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்திறங்கிய என்னிடம் 500 ரூபாயைத்தவிர வேறு சில்லறை ரூபாய் இல்லை.ஆட்டோ ஓட்டுனரிடமும் 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை. அதிகாலையாகையால் வீட்டில் தூங்கி கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டு வாங்கி தருகிறேன் சற்று பொறு என்றேன்,அதற்க்கு அவர் பரவாஇல்லை காக்கா பிறகு வாங்கிகொள்கிறேன் தூங்குபவர்களை எழுப்பவேண்டாம் என்று கூறி சென்று விட்டார்!
தன்னுடைய முதல் சவாரியைக்கூட சமய நிலையறிந்து நடந்துகொண்ட பெருந்தன்மையை அவர் போகும் திசைபார்த்து மனதுக்குள் மெச்சினேன்!
பல நாட்கள் கழித்து நானே தேடிபிடித்து அவரின் ஹக்கை சேர்த்தேன்!
வேறொரு ஆட்டோவில் என்வீட்டிலுள்ள பெண்கள் இரு தெரு தாண்டியுள்ள ஒரு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு தொலைபேசிஅழைப்பு வந்ததால் வழியில் ஒருவர் இறங்கவேண்டிய சூழ்நிலை வந்தது, வண்டியை கொஞ்சம் நிப்பாட்டு ஒரு ஆள் இறங்கவேண்டும் என்று கூரவே, ஒருவரை இறக்கிவிட்டு வண்டிதொடர்ந்து சென்று இவர்கள் செல்லும் வீட்டை அடைந்தவுடன் கூலியையும் கொடுத்திருக்கிறார்கள்!
கூலியைபெற்ற ஓட்டுனர் அதைப்போல் இன்னொருமடங்கும் கேட்டிருக்கிறார், இவர்கள் விளக்கம் கேட்கவே,
ஒரு சவாரியை இறக்கிவிட்டுருக்கிறேன்,அதற்க்கு ஒரு சவாரி கூலியாகும் என்றும் சொல்லி இருக்கிறார்!
ஏம்ப்பா வர்ர வழியில் தானே இறக்கினாய் வேறு எங்கும் செல்லவில்லையே என்றதற்கு, வண்டி புறப்பட்டு வேறு எங்கும் நிற்கக்கூடாது, அப்படி எங்கேயாவது நின்று ஆள் இறங்கினாலோ,ஏறினாலோ தனி சாவரி.
இது எங்கள் ஆட்டோ சங்கத்தின் சட்டம்,யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி இருமடங்கு கூலியையும் பெற்று சென்றும் விட்டார்!
மேலே சொன்ன இரண்டு விஷயகளுக்கு சொந்தக்காரர்கள் இரண்டு வெவ்வேறு ஆடோ ஓட்டுனர்கள் தான்.
மனிதர்களில்தான் எத்தனை விதம், எத்தனை மனம்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross