பின்னூட்டம் posted byகவுஸ் முஹம்மது (ஐக்கிய அரபு அமீரகம்)[28 February 2017] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45259
மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்
புத்திக்கூர்மையை மட்டுமே போதிக்கும் தற்போதைய கல்விமுறை, பொருளாதார தேடலுக்காக மட்டுமே பிள்ளைகளை படிக்க வைக்கும் என் போன்றோர்கள் மாற்றத்தை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
உண்மையில் இப்படி ஒரு பாடத்திட்டம் உள்ளது என்பதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை (அறிமுகம் செய்த என் நண்பனுக்கு நன்றி),
பொருளாதார பலமும், மனித வளமும், பயிற்ச்சியும் இந்த உன்னத மாற்றத்தை முன்னெடுக்க தேவை, அது வரும் பட்சத்தில் நான் என் பிள்ளையை சேரக்கத் தயாராக உள்ளேன். அதற்கு தேவையான எல்லா உதவிகளையும் என்னால் இயன்ற அளவு செய்யவும் (இறைவன் நாடினால்) தயார்.
நமது ஊரில் கல்லூரி படிப்பை முடித்த பெண்கள் பெரும்பாலும் அதன் பின் மேற்படிப்பை தொடராத நிலையில் திருமணம் ஆவதும் அதன் பின் அவர்களின் சிந்தனை குறுகிய வட்டத்தினுள் சுருங்கி விடுவதும் இயல்பே, அவர்களில் விருப்பமுள்ள பெண்களுக்கு பயிற்சியை வழங்கி இதனை செய்யலாம்,
அனைத்து சமுதாய மக்களுக்குமான பள்ளியாக அது செயல்படவேண்டும்.
மாற்றத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் கல்விக்கு மாற்று ஏதும் இல்லை.
இதை பற்றிய ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு அதனை ஊர் பள்ளிவாயில்கள், சங்கங்கள் மற்றும் இணையத்தின் வாயிலாக அறிமுகம் செய்யலாம்.
முடியும் பட்சத்தில் திருமதி. மீனாட்சி அவர்களை விருந்தினராக கொண்டு விளக்க பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம்.
மாற்று கருத்து ஏதுமின்றி நிச்சயமாக இது நல்ல திட்டம்தான் ஆனால் கல்வியை வியாபாரம் செய்வோர் இதனை எதிர்ப்பார்கள், வலுவான மற்றும் நேரடி சாட்சியங்களுடன் பரப்புரையை முன்னெடுக்க வேண்டும்.
10 குழந்தைகள் மட்டுமே சேர்ந்தாலும் தளரக்கூடாது. (அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளோர் நிச்சயமாக இதனை ஆதரிப்பர்).
புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய நிலையில் உள்ளோம். வாழ்த்துக்கள்.
Re:... posted byGouse Mohamed (Dubai)[14 August 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36397
முழு மூச்சுடனும் வீரியத்துடனும் இதனை எதிர் கொண்டால் ஒழிய நம்மால் கட்டுபடுத்த முடியாது. சகோதரர்களே சுனாமி வந்து உயிர்களை அள்ளி சென்றாலும், பூகம்பம் வந்து உயிர்கள் மாண்டாலும், இன்னும் எதனை இயற்கை சீற்றம் வந்தாலும் மனிதர்களாகிய நாம் நம் சொந்த மண்ணை விட்டு போவதில்லை மறுபடியும் அதே நிலத்தில் வாழ்வை தொடர்கிறோம்,
ஆனால் கதிரியக்கம் அப்படி அல்ல, chernobyl - ukraine இல் ஒரு நகரம் அங்கு Nuclear power plant இல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒட்டு மொத்த நகரமே ஒரே வாரத்தில் காலியானது, 26 ஆண்டுகள் ஆனா பின்பும் இன்னும் அங்கு கதிரியக்கத்தின் வீச்சு குறையவில்லை, இன்னும் பல நூறு ஆண்டுகள் மனிதன் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டு இன்று அதனை "பேய் நகரம்" என்று அழைக்கிறார்கள்.
நம்முடைய காலின் கீழும் வெடிகுண்டு இருக்கிறது (a Ticking bomb), வந்த பின் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுவதால் பலன் இல்லை, நிலம் வாங்கவும், நகை வாங்கவும் காட்டும் ஆர்வத்தில் கடுகளவு நம் சுற்றுச்சூழல் விஷயத்தில் காட்டினாலும் பேரழிவை தடுக்க இயலும், இன்ஷா அல்லாஹ்.
Unwanted Expenses posted byGouse Mohamed (Abu Dhabi)[11 October 2010] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 484
Concentrate education and religious principles in our town. we are not depend on tourist incomes as per our people said that our culture will be spoiled more due to this resorts. WE DONT NEED IT.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross