விண்ணப்ப வினியோகம் மட்டுமே இக்ராஃவிலிருந்து... posted byK.J.Shahul Hameed (Kayalpatnam)[04 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 5009
சகோதரர் சாளை ஜியாவுத்தீன் அவர்களுக்கேற்பட்ட சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட வாய்ப்பு்ள்ளது. புரிந்துகொள்வதற்காக பின்வருமாறு இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் விளக்கம் தரப்படுகிறது:-
நம் நகரில் பல பொதுநல அமைப்புகளும் தனித்தனியே இதுபோன்ற இலவச வினியோகங்களை இதுகாலம் வரை செய்து வந்தனர். இதன் காரணமாக, ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பொருட்கள் பெற வாய்ப்பிருந்தது. சில மாணவர்களுக்கு ஒரு இடத்திலும் எதுவும் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.
இத்தனைக்கும் அந்தந்த அமைப்பினர் அவர்களாலியன்ற அளவுக்கு விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்து, சக அமைப்பினருடன் தமது பயனாளர் பட்டியலைப் பகிர்ந்துகொண்ட பிறகுதான் இந்த நிலை.
எனவே, இதுகுறித்து கவலையெடுத்துக்கொண்ட காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் இக்ராஃவிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, இது விஷயத்தில் அனைத்து அமைப்புகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற பின்னரே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதாவது, விண்ணப்பங்களை மட்டும் இக்ராஃவிலிருந்தே வினியோகிப்பதென்றும், பொருட்களை அந்தந்த அமைப்பினர் வழமைபோல தத்தம் வசதிப்படி தமது பாணியிலேயே வினியோகிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த அமைப்பினர் கேட்டுக்கொண்ட அளவுக்கு அவர்களு்க்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கம் போதுமாக இருக்குமென்று கருதுகிறேன். தங்கள் மேலான கருத்துக்கு நன்றி.
அன்புடன்,
இக்ராஃ கல்விச் சங்கம் சார்பாக,
கே.ஜே.ஷாஹுல் ஹமீத்,
செயலாளர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross