Re:... posted byஹசன் இக்பால் (கொழும்பு )[23 July 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 36079
இலங்கையில் உள்ள எங்கள் உறவினர் முஹம்மது ஸாபிர் அண்மையில் துபையில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன் போட்டியில் ஹிப்ழ் பிரிவில் 80 விழுக்காடுகளுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று பரிசு வென்றிருக்கிறார் என்ற செய்தி எங்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட பெரும் மகிழ்ச்சியைத் தந்தது; அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு எங்கள் பாராட்டுகள்.
அவர் ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற அகில இலங்கை ஹிப்ழ் போட்டியில் முதலாமிடத்தை வென்றிருந்ததன் காரணமாகவே சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையின் ஒரேயொரு பிரதிநிதியாகக் கலந்து கொள்ளும் அரிய வாய்பபை அடைந்து கொண்டார். அவர் எதிர்காலத்தில் நிறைய போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பரிசுகள் வெல்வதற்கும், சர்வதேச குர்ஆன் போட்டிகளில் அரபு நாடுகளைச் சார்ந்தவர்களுடன் போட்டி போட்டு முதலாமிடத்தை வென்று கொள்வதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!
இலங்கை சிறியதொரு நாடாக இருப்பதால் முஹம்மது ஸாபிருக்கு சர்வதேச குர்ஆன் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமாயிற்று; இந்தியா பல மாநிலங்கள் அடங்கியதாக உள்ளதால், பல கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு சரியான பயிற்சியும் வழிகாட்டலும் அவசியம்.
எனவே ஹிப்ழ் துறையில் நல்ல பாண்டித்தியம் உளள்ளவர்களைப் பயன்படுத்தி இதற்கான ஆக்கப்பூர்வ ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இலை மறை காய்களாக உள்ள நமதூர் ஹாபிழ்கள் உலகம் மெச்சும் இறை மறைக் கனிகளாக மணமும் சுவையும் பரப்புவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இறைவன் நமது நாட்டத்தையும் தேட்டததையும் நிறைவேற்றித் தருவானாக!
காயல்பட்டணத்தின் வேர்கள்!... posted byஹசன் இக்பால் (???????? , ?????? )[16 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20525
சகோதரர் அப்துல்ஹமீதின் ‘காயல்பட்டினத்தின் வேர்களை’த் தேடும் முயற்சி பாராட்டுக்குரிய தொன்றாகும். ஆயினும் ஆய்வு மேற்கொள்ளும் போது, செவிவழிக் கதைகளைச் சார்ந்து முடிபுகளை எடுக்காமல், தகுந்த ஆவணங்கள், ஆதாரங்களுடனான செய்திகள் தகவல்கள் என்பனவற்றின் அடிப்படையில் விருப்பு வெறுப்பின்றி அது செய்யப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.
அத்தோடு, காயல்பட்டினத்தின் பூர்வீக குடிகள் மற்றும் வந்தேறு குடிகள் பற்றிய ஆதாரப்பூர்வமான விபரங்கள், அரபிகளின் குடியேற்றங்களினால் இஸ்லாம் பிறரைச் சென்றடைந்திருக்குமானால் அது நிகழ்ந்த விதம், அரபிகளின் மரபு வழியிலான மற்றும் குர்ஆன்-ஹதீஸ் வழியிலான திருமண நடைமுறைகள் காயல்பட்டினத்தில் ஓரிரு முஹல்லாக்களைத் தவிர ஏனையவற்றில் மாறுபட்டிருப்பதற்கான காரணங்கள், சீதனம் மற்றும் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை போவது போன்ற வழக்கங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், காயல்பட்டினத்தில் சில முஹல்லாக்களைச் சார்ந்தவர்கள் திருமணச் சம்பந்தங்களில் ஒதுக்கப்படுவதற்கும்- கீழ்ச்சாதியினர் எனக் கருதப்பட்டு எல்லா விசயங்களிலும் புறக்கணிக்கப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும்- அவர்களுடைய கருத்துகள் இடங்கொடுக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுவதற்கும்- அவர்கள் அடக்கியொடுக்கப்பட எல்லாரும் தங்களுக்கிடையிலுள்ள மார்க்கம் சம்பந்தமான முரண்பாடுகள் அனைத்தையும் மறந்து ஒன்றுசேர்ந்து முயற்சிப்பதற்குமான காரணங்கள் என்பனவற்றையும் இந்த ஆய்வில் உள்ளடக்கிக் கொள்வதன் மூலமே அது முழுமை பெறும் என்பதும் எனது நிலைப்பாடாகும்.
இதனைப் பதிவு செய்வதாயிருந்தால் எந்த அடித்தல் திருத்தலோ கூடுதல் குறைவோ செய்யாமல் உள்ளதை உள்ளவாறே முழுமையாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆய்வின் மூலம், குலப்பெருமை போன்ற ஜாஹிலிய்யத்தான உணர்வுகள் தூண்டப்படாமலும் ஊரின் ஒற்றுமை பாதிக்கப்படாமலும் வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross