எங்களன்புத் தாயார் எஸ்.எம்.பி.ஆயிஷா உம்மா அவர்கள், கடந்த 05.03.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் 12.45 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா மறுநாள் 06.03.2017. திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூமா அவர்களின் வஃபாத்தையொட்டிய தங்கள் இரங்கல் கருத்துக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எங்களுள் ஒருவருக்கு தாங்கள் தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மனமார்ந்த துஆக்களுடன்,
எஸ்.இ.செய்யித் முஹ்யித்தீன்
எஸ்.இ.தைக்கா தம்பி
‘மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி’ எஸ்.இ.அப்துல் மாலிக்,
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்.
செய்தி: தமிழக அரசின் மகளிர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக 5 பெண்களுக்கு கல்வி உதவித்தொகை! நகர்மன்றத் தலைவர் வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தமிழக அரசின் மகளிர் திறன்... posted byMaster Computer Academy (Kayalpatnam)[11 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14368
காயல்பட்டணத்தில் கடந்த 15 வருடங்களாக கம்ப்யூட்டர் பயிற்சியினை வழங்கி வரும் எமது மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமிக்கு, நகராட்சி நிர்வாகம் வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byMaster Computer Academy (kayalpatnam)[20 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11399
புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னல்லாஹ மஅஸ் ஸாபிரீன். எங்கள் பாட்டனார் கண்ணியத்திற்குரிய சங்கைமிகு சி.லெ.சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்களின் வஃபாத் செய்தியை அறிந்து அகிலத்தின் அன்புள்ளங்கள் காயல்பட்டணம்.காம் இல் அனுப்பிய ஆறுதல் செய்திகள் அனைத்தும் புண்பட்டிருந்த எங்களின் இதயத்திற்கு அருமருந்தாக அமைந்தது.
பணத்தை யாராலும் எந்த வழியிலும் தேட முடியும்.
ஆனால் அல்லாஹ்வின் அருளைப் பெற்று மக்கள் மனதில் நற்குணத்தின் சிகரமாக இடம் பிடிப்பது ஒருசில மாமனிதர்களால் மட்டுமே முடியும். அத்தகைய மாமனிதர்களில் எங்களின் பாட்டனாரும் ஒருவராக திகழ்கிறார் என்பதை அனுதாப செய்திகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன, அல்ஹம்துலில்லாஹ்!. இத்தகைய ஒழுக்கச் சீலரின் குடும்பத்தில் பிறந்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் பாட்டனாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியைக் கொடுத்துஇ நபிகள் கோமான் றசூலே கரீம் (ஸல்) அவர்களின் அருகில் அமரக் கூடிய நற்பாக்கியத்தைக் கொடுத்தருள்வானாக ஆமீன். யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்.
இப்படிக்கு
வி.எஸ். ஹஸன் (பூட்டன்)
எஸ்.ஹெச்.ஷேக் அப்துல் காதர் (பூட்டன்)
எஸ்.ஹெச்.ஃபாத்திமா நஜ்மி (பூட்டி)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross