Re:... posted byMohamed Uthuman (Kozhikode)[23 August 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 29639
அஸ்ஸலாமு அழைக்கும்.
பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடக்கும் நம் காயல் மக்களால்
"நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள், பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்…"
(Al-Quran , Surah Al-Maidah , Verse No2)
என்ற இறைமறை வசனத்தை மட்டும் மனதில் கொண்டு துவங்கிய இந்த அமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டு அதன் உயரிய நோக்கங்கள் நிறைவேறுவதற்கும், நம்மை ஆட்டிபடைக்கும் கொடிய நோய்களில் இருந்து நம் மக்களை பாதுகாப்பதிர்க்கும், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக,
குறிப்பு: இந்த அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் அதிகமாக நமது ஊரை விட்டு வெழியில் இருப்பவர்கள் என்பதால், இதனை மிகசிறப்பாக நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குறிப்பாக முழுநேர நிர்வாக அதிகாரி சகோதரர் சிராஜுதீன் , மற்றும் செயலாளர் தர்வேஷ் காக்கா ஆகியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக ஆரோகத்துடன் செயல்பட அல்லாஹ் துணைபுரிவானாக என்று பிரார்த்திப்போமாக.
Re:... posted byMohamed Uthuman.M.A.K (Calicut)[22 August 2013] IP: 27.*.*.* India | Comment Reference Number: 29632
அனைவர்கள் மனதிலும் எழக்கூடிய, மிக அருமையான, (கருத்துகளை போன்ற) கேள்விகள் கேட்டிருக்கும் இரு சகோதரர்களுக்கும், மற்று வாசகர்களுக்கும் MICROKAYAL
மற்றும் SHIFA பற்றிய சிறு விளக்கம்.
MICROKAYAL முழுமையாக 'ஷிஃபா' விடம் ஒப்படைப்பதாகத்தான் 'ஷிஃபா' தொடங்குவதற்கு முன்னர் நடைபெற்ற ஆரம்ப ஆலோசனை கூட்டங்களில் பேசப்பட்டதும், MICROKAYAL லின்
விருப்பமும்.
அதனை தொடர்ந்து உலக நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் 15 காயல் நல மன்றங்கள் கலந்து கொண்டு, 5 முறை ஸ்கைப் கலந்துரையாடல்கள் நடைபெற்றது அந்த
கூட்டங்களில் 'ஷிஃபா' சிறப்பாக துவங்கி செயல்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானங்களில் ஒன்றாக, மிகச்சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் MICROKAYALலும் மற்ற காயல் நல மன்றங்கள் எப்படி தனி ஒரு அமைப்பாக இருக்கிறதோ அதே போன்று
இருக்கவேண்டும். மற்ற காயல் நல மன்றங்கள் ஷிஃபாவில் அங்கம் வகித்து செயல்படுவது போல் MICROKAYAL லும் அங்கம் வகிப்பது.
மருத்துவ உதவி விஷயத்தில் இனி 'Duplication' என்ற பெயருக்கு இடமே இல்லாதவாறு MICROKAYAL லாக இருந்தாலும், மற்ற காயல் நல மன்றங்களாக இருந்தாலும், நேரடியாக மருத்துவ உதவி விண்ணப்பங்கள் சேகரிப்பதற்கு பதிலாக இனி
முதல் 'ஷிஃபா' மூலமாக கிடைக்கப்படும் மருத்துவ உதவி விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிப்பதுடன், அதற்கான உதவிகளையும் ஷிஃபா மூலமாகவே பயனாளிகளுக்கு வழங்குவது.
அதாவது மைக்ரோ காயல் தனது இணையதளம் www.microkayal.com மூலம் தன்னுடைய 'உலகளாவிய உறுப்பினர்கள்' மூலம் சேகரித்து தரும் நிதியையும், அது போன்று நல மன்றங்கள் தங்கள் உறுப்பினர்களிடமிருந்து பெற்று தரும் நிதியையும் சேர்த்து, பயனாளிகளின் தேவையை 'ஷிஃபா' பூர்த்தி செய்யும்.
அந்த கூட்டங்களில் நான் பங்கெடுத்தத்தாலும், அந்த ஒப்பந்தங்களுக்கும் மாறாக ஒன்றும் இல்லை என்பதாலும் இதனை எழுதுகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross