அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ posted byMOHAMMED NOOHU (kayalpatnam)[10 October 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 30640
அல்லாஹ் இவர்களின் குடும்பத்திற்கு மனக்கவலையை நீக்கி அருள் புரியட்டும்!!
இந்த மரணச்செய்தி உண்மையில் படிப்பவர்களுக்கு மரணச்சிந்தனை வராமல் இருக்காது.மேலும் இந்த உலக வாழ்க்கை அற்பம்தான் என்பதை வல்ல இறைவன் இதைப்போன்று சில நிகழ்வுகளை ஏற்படுத்திக் காண்பிக்கிறான்.
எனவே மறுமை வீடுதான் நிலையானது . அதற்காக நம் தயாரிப்புகளை துரிதப்படுத்தி மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையில் இறைவனை நாம் சந்தித்து,நம் உயிரினும் மேலான நபிகளார் (ஸல்)அவர்களோடும்,நபித்தோழர்களோடும் ஒன்றாக அமர்ந்து,நம் குடும்பத்தோடு சந்தோஷமாக பிரவேசிக்கக்கூடிய பெரும்பாக்கியத்தை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக! இன்ஷா அல்லாஹ் !!!
Re:... posted byMohammed Noohu (jeddah)[21 December 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24726
அஸ்ஸலாமு அழைக்கும்.
நமதூர் காயல்பட்டணத்தில் அண்மையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளில் நுழைந்து கேஸ் சிலிண்டர் திருடுவது, தெருக்களில் மோட்டார் பைக்கிலிருந்து பெட்ரோல் உறிஞ்சி எடுப்பது, வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு நுழைந்து நகை, பணம் மற்றும் வீட்டில் வளர்க்க கூடிய சாதாரண கோழி, ஆடு, புறா போன்ற பல திருட்டுகள் தொடர்ந்து பரவலாக நடக்கின்றன.
இப்போது நடந்த நகைக்கடையில் கணிசமான ஆபரணங்களையும், பணங்களையும் திருடியது, இன்னும் சுமார் பத்து இடங்களில் கையாடல் செய்ய முயற்சி செய்தது நம் அனைவரையும், வியாபாரிகளையும் பயங்கரமான அச்சத்தை ஏற்படுத்தியது.
இவை நிச்சயமாக ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டமும் ,அதன் பின்னணியின் பல சதித்திட்டங்களும் இருக்கலாம் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது.
எனவே ஊர் பொதுமக்கள் தங்களின் வீடுகளையும், கடைகளையும், பொருள்களையும், முறையாக பாதுகாத்து வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் பெண்கள் செல்லவேண்டும்.
முக்கியமாக ஆட்டோவில் செல்லும் போது (அது அடுத்த தெருவுக்கு செல்வதாக இருந்தாலும் சரியே! தூரமாக செல்வதாக இருந்தாலும் சரியே!) தனிமையில் பயணிப்பதை முற்றிலும் தவிர்த்து துணையுடன் செல்லவேண்டும்.
அதைப்போன்று தெருக்களில் வந்து வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகளிடம் அவசியம் இல்லாத பேச்சுகளை தவிர, தன் குடும்பத்தை பற்றியோ அல்லது தன் கணவரின் தொழில் பற்றியோ பேசக்கூடாது.
மேலும் மொபைலில் அல்லது வீட்டு தொலைபேசியில் அறியாத நம்பரிலிருந்து கால் வரும்போது தவிர்ப்பது நல்லது. இருந்தாலும் மீறி எடுத்து பேசினால் அறியாத நபராக இருப்பின் உரத்த சப்தத்துடன் தவறான நம்பர் என்று சொல்லி துண்டித்து விடவேண்டும்.
ஆகவே இவை அனைத்தையும் பேணி நடந்தால் ஓரளவிற்கு திருட்டுகள் குறையலாம் இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ் மிக அறிந்தவன். அவனே அனைத்தையும் பாதுகாப்பதற்கு போதுமானவன். நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross