Re:... posted byMohamed Sathack (Chennai)[23 March 2015] IP: 121.*.*.* India | Comment Reference Number: 39799
கவனிக்கவும் //இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஜி.ராமசாமி// C & P
சில மாதங்களுக்கு முன்பு செய்துங்கனலூரில் வைத்து DCW ஆலைக்கு ஆதரவாக போராடியவர்கள் இவர்களே. வேறு எந்த மத சாதி அமைப்புகளும் கலந்து கொள்ளாத இந்த நிகழ்வில் இவர்கள் தாங்களாகவ போவர்கள்?
DCW ஆலையே காசு குடுத்தே காயல்பட்டினத்து மக்கள் முஸ்லிம்கள். அவர்களை எதிர்க்க மதத்தை தான் கையில் எடுக்க வேண்டும் என்ற நோக்கோடு ஹிந்து முன்னணியை காசு குடுத்து போராட சொல்லியது போல இருக்கிறது. பார்க்க http://www.kayalpatnam.com/shownews.asp?id=14930
அவர்களுக்கு ஏற்றார் போல செயல்படும் நமது நகரமன்ற உறுப்பினர்கள். கையூட்டு பெற்றார்களாஎன்று தெரியவில்லை.
செய்தி: வசதியற்ற பயனாளிகளுக்காக காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை - கே.எம்.டீ. மருத்துவமனை இணைந்து சலுகை அட்டை அறிமுகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohamed Sathack (Chennai)[22 March 2015] IP: 183.*.*.* India | Comment Reference Number: 39779
நல்ல விஷயம். இத்தகைய முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்
அதே நேரம் காக்கா சாளை S . I . ஜியாவுத்தீன் அவர்கள் கேட்டது போல எதற்கு நமது ஊரில் பல அமைப்புகள்? அதுவும் ஒரே நோக்கத்திற்காக தனி தனியே இயங்குகின்றன ?அதனால் என்ன லாபம் பெரிதாக விளைய போகிறது? ஒன்றிணைந்து கூட்டாக செயல்படலாமே?அதனால் இன்னும் அதிகமான பொருள் உதவியும் வறியவர்களுக்கு கிடைக்குமே
Re:... posted byMohamed Sathack (Chennai)[21 March 2015] IP: 121.*.*.* India | Comment Reference Number: 39728
//பாரம்பரியம் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் கல்யாணப் பந்தலுக்கு வந்து, அங்கு யாரை முதலில் பார்கிறார்களோ அவரோடு சேர்ந்து சஹனில் அமர வேண்டும். ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் இல்லை. தனக்குத் தெரிந்த நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ ....//
இந்த கருத்தில் கட்டுரை ஆசிரியரோடு முழுதாக ஒத்து போக முடியவில்லை. நண்பர்கள் சகிதம் பலர் வருவார்கள். அதை நாம் தடுக்க முடியாது . வரும்போதே அவர்கள் தங்களது நண்பர்களுடன் , அல்லது மாமா மச்சான் சகிதம் தான் வீட்டில் இருந்தே கிளம்புவார்கள் .
//தனது அந்தஸ்திற்கு சமமானவர்களுடனோதான் அமர்கின்றனர். அறிமுகம் இல்லாதவருடனோ, தகுதியில் குறைந்தவருடனோ அல்லது ஏழைகளுடனோ அமர மாட்டார்கள். //
இந்த கருத்திலும் கட்டுரை ஆசிரியரோடு முழுதாக ஒன்றி போக முடியாது . ஆனால் //தகுதியில் குறைந்தவருடனோ// என்ற ஒரு சிந்தனை நமது ஊரில் சிலரது மனதில் இருக்கத்தான் செய்கிறது . இதை சர்க்கரை வியாதி போல தான் மருத்துவம் செய்ய வேண்டும். சீழ் பிடித்த அந்த மனங்களை(அந்தஸ்தில் கூடிய?) வெட்டி ஒதுக்கி விடலாமே தவிர்த்து அதற்காக சஹான் முறை வேண்டாம் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. சஹான் முறை மாறுவது காலத்தின் கட்டாயம் எனில் அது அதுவாகவே நடக்கும் . அனால் அது குறித்து விவாதம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்றே எண்ணுகிறேன்.
//ஒருமுறை விருந்தொன்றில் எனது தெருவாசி ஒருவருடன் அமர நேரிட்டது. இதற்கு முன்பு அவருடன் பழகியதில்லை. மிகவும் அருவருப்பாக சாப்பிட்டார்.//
இது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை . வீட்டில் பிள்ளைகள் வளர்ப்பு முறை குறித்து கற்று கொடுப்பது இல்லை என்று தெளிவாக தெரிகிறது. இதுவும் மாற்றமே. ஆனால் நன்மைக்கான மாற்றம் இல்லை. ஆனால் இது குறித்து பொது தளங்களில் கருத்து தெரிவிக்காமல் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. அப்படி தெரிவிக்க வேண்டிய கட்டாயமிருப்பின் அதற்கான தீர்வையும் சேர்ந்து ஆசிரியர் சொல்லி இருந்தால் இது தவறாக விளங்காமல் இருந்து இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross