Re:... posted byதேக் (kayalpattinam)[20 August 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 29597
இவர்கள் இடத்தில் பலமுறை கேட்டக் கேள்வி..........
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்ன சொல்லை இந்த நூற்றாண்டில் வந்து குரானை மட்டும் வைத்து மக்களை மாற்ற நினைப்பது மார்க்கமாகுமா?
1900. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை" என்று உள்ளது.
1906. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
1907. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸுக்கு ஹிஜ்ரி கமிட்டி இன்று வரை சொல்லும் வாதம் இந்த ஹதீஸை இப்படி புரிய கூடாது என்பது மட்டும்தான் இவர்களுடைய பதிலாக உள்ளது சரி ஹிஜ்ரி கமிட்டி சொல்லுவதைப் போல் புரிந்து பிறையை இபாத்ததாக எடுத்தால் கண்டிப்பாக நபி (ஸல் ) அவர்கள் காட்டிய வழிமுறைக்கு 2 நாட்கள் வித்தியாசம் வரும்
ஹிஜ்ரி கமிட்டி ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பல கருத்துடையவர்கள் வரலாம் இவர்களுடைய கொள்கைக்கு விளக்கம் சொல்லும்போது தனி மனிதரையோ
தனி ஜமாத்தையோ விமர்சிக்காமல் செய்தியை மட்டும் சொல்லகூடிய நிகழ்ச்சியாக இருக்கட்டும் தனி மனிதரை விமர்சிக்கும் நிகழ்ச்சியாக இருந்தால் மக்கள் மத்தியில் தவா சென்றடைய கஸ்ட்டம்
Re:... posted byதேக் (kayalpattinam)[19 August 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 29566
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சாதி வெறிக்கு எதிராகவும்,மூட நம்பிக்கை ஒழிக்கவும்,மத வெறியை இந்த பூமியில் இருந்து அகற்றவும் பல்வேறு தளங்களில் பணியாற்றி இவை அனைத்தையும் ஒரு சேர ஒழிக்க இஸ்லாம் என்ற தளம் தான் சிறந்தது என்பதை இவருக்கு யா அல்லாஹ் நீ விளங்கியாதைப்போல்
யா அல்லாஹ் அனைவரும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக ...........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross