Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:44:11 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameமவ்லவி முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி.
PlaceOoty
Approved Comments4
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: அமாவாசை தினம் எனக்கூறப்படும் ஜூலை 26 அன்று தேயும் பிறை தென்பட்ட காட்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by மவ்லவி முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி. (Ooty) [31 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36164

9. அல்லது இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா?

10. சந்திரனின் 100 சதவிகித ஒளிரும் தன்மையிலிருந்து சுமார் 0.5%, 1% அல்லது 1.5% அளவு ஒளி மட்டும் பூமிக்குத் தெரிய வாய்ப்புள்ளதாக விண்ணியல் கணக்கீடு சொல்லும் அந்தப் பிறையின் படித்தரத்தை ஒரு மனிதன் தனது புறக்கண்களால் சர்வ சாதாரணமாக பார்க்க இயலுமா? அது சாத்தியம்தானா?

11. சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அந்திக் கருக்கலினால் (Twilight) ஏற்படும் ஒளிச் சிதறல்களுக்கு மத்தியில் வெரும் ஒரு சதவிகிதம்கூட இல்லாத அப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப் பார்ப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும். இந்நிலையில் அதை சர்வ சாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால் பார்த்து கேமராவால் போட்டோவும் எடுக்க முடிந்தது என்பதை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்?

12. மேற்படி பிறையைக் கண்டதாகத் தகவல் வெளியிட்டது யார்? முஸ்லிம்களா? முஸ்லிம்களே பிறை சாட்சி சொன்னாலும் அதன் சாதக பாதகங்களை விஞ்ஞான உண்மைகளோடு சரிபார்த்து (!) அதன் பிறகே ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், படம்பிடித்தவர் யார் என்று அறியாத நிலையிலும் அவர் எடுத்ததாக வெளியாகும் செய்திகளைக்கூட நம்பி எந்த அடிப்படையில் இணையதளங்களிலே பரப்புகின்றீர்கள்?

13. அமாவாசையில் பிறை தெரிந்ததாக வெளியிடப்படும் தகவல்களில் பிறை பார்த்து போட்டோ எடுத்தவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாகவே உள்ளனர். இப்படி காஃபிர்கள் ஒரு படத்தை வெளியிட்டு பிறை சாட்சி சொன்னாலும் அந்த சாட்சியத்தை ஏற்று முஸ்லிம்கள் அமல் செய்யலாமா?

14. அமாவாசை நிகழ்வை அறிவியில் ஆய்வாளர்கள் உலக நேரத்தில் குறிப்பிடுகையில் அதை அவரவர்களின் லோக்கல் நேரத்திற்கு (Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது ஏன்?

15. ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள் வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் ஜூம்ஆ வக்தில் தொழும் போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகள் சனிக்கிழமையாக விடிந்து விடும். அதனால் சனிக்கிழமைதான் அமெரிக்க மக்கள் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்று சொல்வீர்களா?

இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி வருகிறோம். இவை அனைத்திற்கும் இதுவரை மௌனமே பதிலாக வந்துள்ளது. ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் என்று நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.

எனவே தற்போது ஹிஜ்ரி நாட்காட்டியை பொய்படுத்திட சங்கம தினத்தில் பிறை தெரிந்ததாகப் பொய்யான போட்டோக்களை வெளியிட்டு இவர்கள் நம்மைப் பொய்ப்படுத்திட முயற்சி செய்யவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை பொய்யாக்கிட முனைந்துள்ளனர் என்பதே உண்மையிலும் உண்மை.

வஸ்ஸலாம்

மவ்லவி முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி. உட்டி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமாவாசை தினம் எனக்கூறப்படும் ஜூலை 26 அன்று தேயும் பிறை தென்பட்ட காட்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by மவ்லவி முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி. (Ooty) [31 July 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36163

அமாவாசை என்னும் புவிமைய சங்கம நாளில் பிறை புறக்கண்களுக்குத் தெரிவாதாக பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி நாம் கேட்டுவரும் அடிப்படையான சில கேள்விகள்.

1. புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ பொதுவாக அனைத்து உலக நாடுகளிலும் ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா?

2. புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ உங்களின் அபிமானத்திற்குரிய ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப் பகுதியிலோ ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா?

3. மேற்படி புவிமைய சங்கம நாளில், அரிதாக சில மாதங்களில் மட்டும் தெரியும் வாய்ப்புள்ளது என்று நீங்கள் கூறும் அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால் பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா?

4. அப்படி அரிதான மாதங்களில், அவ்வாறு அரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறை சாதாரணமாக புறக்கண்களால் பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, Charge-Coupled Devices (CCDs) image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றதா?

5. Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்ட பிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவை எடுக்கப்பட்டது என்றால் Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும் பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதை ஏற்று செயல்படத் தயாரா?

6. தொலைநோக்கி (Telescope) மூலம் பிறை பார்க்கப்படுவதும், புறக்கண்களால் பார்க்கப்படுவதும் ஒன்றுதான் என்று உங்கள் நிலைப்பாடாக அறிவிக்கத் தயாரா?

7. அரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன் அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும் என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றதா? இதற்கு ஆதாரம் என்ன?

8. 'ஃபஇன் கும்ம அலைக்கும் - ஃபக்திரூலஹூ' - அதாவது மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கம நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ புறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா? அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?

தொடரும் .........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமாவாசை அன்று பிறையை காண இயலாதா? நாளை முயற்சிக்கலாம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Movlavi Mohammed Zubair Firdowsi (Eruvadi) [31 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32894

சகோதரர் ஸாலிஹ் அவர்களுக்கு அஸ்லாமு அலைக்கும்.

மேற்படி செய்தியின் உண்மை நிலை பற்றிய எனது கமெண்ட்டிற்கு நீங்கள் பதில் எழுதியுள்ளீர்கள். நீங்கள்தான் இந்த இணையதளத்தின் ஆசிரியரா? இந்தக் கட்டுரையை பிற்கால பதிவுக்காக நீங்கள்தான் வெளியிட்டீர்களோ?

அமாவாசை அன்று பிறையை சர்வசாதாரணமாக புறக்கண்களால் பொதுவாகக் காணலாம் என்பது தவறான செய்தியாகும். உங்கள் பதிவில் DANJON Limit பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். வெற்றுத் தத்துவங்களும், அனுமானங்களும் மார்க்க ஆதாரமாகாது. கருதுகோள்கள் காலத்தால் மாறுபடுபவை.

சில தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள். தொலை நோக்கிகள் மூலம் பிறையை பார்ப்பதும், புறக்கண்களால் பிறையை பார்ப்பதும் ஒன்றே என்பது உங்கள் இணையதளத்தின் நிலைப்பாடு என்றால் அதை முதலில் மக்களுக்குத் தெளிவு படுத்துங்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அறிவும், பிறைகள் பற்றிய ஞானமும் அற்றவர்களின் தகவல்களை நம்புவதை முதலில் நீங்கள் கைவிடுங்கள். குர்ஆன் சுன்னா கூறும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையை நோக்கி உங்களின் பயணத்தை துவங்க முயலுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

நீங்கள்தான் இந்த இணையதளத்தை நடத்துபவராக இருந்தால், நீங்கள் எழுதியுள்ள வரிகளை கொஞ்சம் படியுங்கள். //காலை, மதியம், இரவு என ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அமாவாசை நிகழ்வது இல்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.// என்று எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை நடைபெறும் பகுதியின் நேரம் நன்பகலாகத்தான் இருக்கும் என்ற விஞ்ஞான உண்மையை மறைத்துள்ளீர்களா? மறந்துள்ளீர்களா? அல்லது அதுபற்றிய ஞானம் உங்களுக்கில்லையா?

அமாவாசை நிகழ்வை அறிவியில் ஆய்வாளர்கள் உலக நேரத்தில் குறிப்பிடுகையில் அதை அவரவர்களின் லோக்கல் நேரத்திற்கு (Local Time) மாற்றி அமைத்து நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது ஏன்?

ஜூம்ஆ தொழுகையை அமெரிக்க மக்கள் வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் ஜூம்ஆ வக்தில் தொழும் போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகள் சனிக்கிழமையாக விடிந்து விடும். அதனால் சனிக்கிழமைதான் அமெரிக்க மக்கள் ஜூம்ஆ தொழுகிறார்கள் என்று சொல்வீர்களா?

//நாளை (ஜனவரி 30), இங்கிலாந்து நேரப்படி இரவு 09:38 மணியளவில், அமாவாசை நிகழ்கிறது. நாளை அதிகாலை, சூரியன் உதயத்திற்கு முன்னர், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உட்பட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் - தேயும் பிறையைக் காணலாம்.// என்றும் எழுதியுள்ளீர்கள். நீங்கள் கூறியுள்ளபடி அமாவாசை அன்று தேய்பிறை (Waning Crescent) புறக்கண்களுக்கு எங்கும் தென்படவில்லை. எனவே உங்களின் கணிப்பு தவறு என 100% நிரூபனமாகி விட்டது. இதை நீங்கள் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வெட்கப்படுவதேன்?

குர்ஆன் சுன்னா ஒளியில் பிறைகளைப் பற்றிய விஞ்ஞான உண்மைகளைத் துல்லியமாக அறிந்து கொள்ள ஹிஜ்ரி கமிட்டி உங்களையும் அழைக்கிறது.

பிராத்தனைகளுடன்....
முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி.

Contact me at:
Muhammed Zubair.
Address : 160/101. North Main Road,
Eruvadi. Tamil Nadu (INDIA).
PIN : 627103.
Mbl : 0091 9500 794 544.
Visit : www.mooncalendar.in


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அமாவாசை அன்று பிறையை காண இயலாதா? நாளை முயற்சிக்கலாம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Movlavi Mohammed Zubair Firdowsi (Eruvadi) [30 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32877

காயல்பட்டினம்.காம் வெளியிட்டுள்ள இச்செய்தி தவறான கருத்தாகும். அமாவாசை தினமான இன்று தேய்பிறை புறக்கண்களுக்கு எங்கும் தென்படவில்லை. எனவே அமாவாசை அன்று புறக்கண்களால் தேய்பிறையை பார்க்க வியலாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகியுள்ளது.

மேலும் விளக்கங்களுக்கு தெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்! என்ற தலைப்பில் ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டுள்ள கட்டுரையை www.mooncalendar.in இணையதளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved