Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byISMAIL (KTM) (Hong Kong)[13 October 2011] IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10518
டில்லியிலும் சென்னையிலும் இருந்து கொண்டு அடித்தட்டு வரை ஆளும் அதிகாரத்தைப் பகிர்ந்து பரவலாக்கவே உள்ளாட்சி முறை நடைமுறைக்கு வந்தது.
அதனால் தான் சுமார் 30 லட்சம் பேர் வரை மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு ஊர் மற்றும் கிராமங்களுக்குத் தேவையான பல நல்ல காரியங்களை அதிகாரத்திலிருந்து கொண்டு செயல்படுத்த முடிகிறது.
ஒரு நாளில் ஒரு வேலை உணவுக்கு வாங்கும் வெண்டைக்காயையும் தக்காளியையும் கூட பார்த்துப் பார்த்து வாங்கும் பொழுது ஐந்தாண்டுகள் நம்மை ஆள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் வாக்களிப்பதென்பது சிங்கத்தின் கூண்டிற்குள் நம் தலையை நீட்டுவதற்கு சமம்.
இன்று நடை முறையில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அரப்பணியாற்றும் திறமை உடையவர்களா என்பதைக் கூடப் பார்க்காமல் கட்சிக்கு விசுவாசமானவர், நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொண்டர் என்ற அடிப்படையில் மட்டுமே அரசியல்வாதிகளால் களமிறக்கப்படுகின்றனர்.
தேர்தல் முடிந்து விட்டாலோ எதிரும் புதிருமாக நின்று வெட்டுக் குத்து என மோதிக்கொண்டவர்கள் கூட ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்ற மாறுபாடின்றி ஓர் அந்தரங்கக் கூட்டணியை அமைத்துக்கொண்டு தொகுதிக்குள் நிறைவேற்றப்படுகின்ற திட்டப்பணிகள் அனைத்திலும் ஒதுக்கப்படுகிற அரசு நிதியிலிருந்து ஒப்பந்தக்காரர்கள் ஒழுங்காகப் பதினைந்து சதவீதம், இருபது சதவீதம் என்று சத்தமில்லாமல் உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு கொடுத்து விடவேண்டும்.
ஈரத்துணியை போர்த்தி ஓசைப்படாமல் கோழி அருக்கப்படுவதைப் போல ஜனநாயகம் அமைதியான முறையில் படுகொலை செய்யப்படுகிறது.
ஊருக்குப் பொதுவானது என நம்மிடையே இருக்கும் ஐக்கியப்பெரவையும் கூட
வேட்பாளர் எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முழுக்க முழுக்க இந்த அரசியல் வாதிகளைக் கொண்டு கூட்டம் நடத்துவது தான் வேதனையும் வேடிக்கையும்.
கூட்டத்தில் மேடையை அலங்கரித்து ஆனால் பேசாத பெரியவர்கள் உண்மையில் நல்லவர்கள். ஊர் பற்றிய செய்திகளை முழுமையாக அறியாமலும் எதிர்வாதம் எதனால் எழுகிறது என்றும் சற்று ஆய்வு செய்து பார்த்திருந்தால் கூட்டத்தில் கலந்து கொள்வதையே யோசித்துப் பார்த்திருப்பார்கள்.
இத்தனைப் பேர் கோட்டத்தில் எத்தனை தேடியும் சென்ற முறை ஆட்சியில் இருந்த நமதூர் செர்மஎனைக் காண முடியவில்லை.
எத்தனையோ தனவந்தர்கள் இருந்தும் பற்பல உதவிகளை நமதூருக்குப் புரிந்தும் வரும் நிலையில் ஒரு குறிப்பிட்டவரை மட்டும் பெயர் சொல்லி இவர் ஐ.பே. வேட்பாளரைத்தான் ஆதரிக்கிறார் என்று கூறுவதற்கு என்ன காரணம் என்பதை ஊர்வாசிகள் விளங்கிக் கொள்வார்கள்.
"ச்சீ ச்சீ வெட்கக் கேடு, த்தூ த்தூ மானக் கேடு" என ஒருசிலரை சில வருடங்களுக்கு முன் இதே ஊர்வாசிகள் தான் இகழ்ந்தார்கள்.
கூட்டத்தில் இடம்பெற்ற ஒரு சில அரசியல் வாதிகள் ஏதோ பட்டியல் காட்டியல் என மிரட்டுவது எதற்கெனப் புரியவில்லை. அதையும் வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்.
குடும்ப அரசியலுக்கு இடமில்லை எனக் கூறிக்கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களை வைத்தே அறிமுகம் செய்வதும் என்ன சேவையை எப்போது எங்கு செய்தார்கள் என்ற புள்ளிவிவரங்கள் ஏதுமின்றி அவரைத் தெரியும் இவரைத்தெரியும் எனக் கூறுவதும் தான் ஆட்சி செய்வதின் அடிப்படை தகுதிகளா என ஊர்மக்கள் சிந்திக்கவேண்டும்.
"அம்மாவே எங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த நினைக்காதபோது" என்றெல்லாம் அங்கலாய்ப்பது ஒரு அதிகாரக் கூச்சலாகவே தெரிகிறது.
ஒரு சிலரது சிந்தனைகளை அப்படியே மூலையில் பதிவிறக்கம் செய்து கொண்டு ஊர் மன நிலையை விருப்பு வெறுப்பின்றி ஆராயாமல் முடிவுகள் மேற்கொள்வதற்கு உஹதையும் பத்ரையும் ஏன் உவமையாக்க வேண்டும்.
"இங்கு பேரவையால் நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஜனநாயக அடிப்படையிலேயே நடைபெற்றுள்ளது" எனக் கூறுவது முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. அது ஒழுங்காக நடந்திருந்தால் இத்துணைப் போட்டிகளுக்கு வேலையே இருந்திருக்காதே.
"நாளை முதல்வரை எவ்வாறு அணுகுவார்? நீ யார் என்று அவர் கேட்டால், நான் ஊரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றவள் என்று சொன்னால், அம்மா அவரது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள மாட்டார்களா?" _ ஏதோ குழந்தைகளுக்கு முன்பாக நின்று பேசுவதுபோல இவ்வாதம் அமைந்திருக்கிறது. காயல் பெண்களுக்கு கலைஞர் தான் முதல் ...................... எனக்கூரியவரின் வாயிலிருந்து விழுந்த முத்துக்குவியல் தான் இவை.
"சாதாரணமாக அரசியல் கூட்டங்களில் புதிதாக உரையாற்றும் ஒருவருக்கு 10 பேர் கை தட்டுவார்கள். பின்னர் 20, 30, 50, 100, 500 என்று கை தட்டு வந்துவிட்டால் அவருக்கு அரசியல் போதையாகிவிடும்" என இந்த அறிவு ஜீவி (அரசியல்) பேசிவிட்டு சென்றிருக்கிறார்.
பண புழக்கம் இருந்தால் தான் அரசியல் நடத்த முடியும் என்பதற்கு இந்த தொடர் நினைவூட்டலா..
ஆலிம்கள் சரியான வழியை மக்களுக்கு அடயாளப் படுத்துபவர்கள். ஒற்றுமையைப் பற்றியும் தண்டனையைப் பற்றியும் கூறும் முன் அனைவரின் கருத்துக்களையும் தீர விசாரித்து அறிவுரை பகர்தல் நலம்.
“தாய் - மகளை எதிர்த்துப் போட்டி” என்று வெப்சைட்டில் கருத்து எழுதியிருக்காங்க... எல்லாத்தையுமே திறந்தா சொல்ல முடியும்? வாக்குச் சாவடியில் அதிக முகவர்களை வைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் சில உள்நடவடிக்கைகள்தான் இவை"_ இதென்ன, யாருக்காக இந்த நடவடிக்கைகள். இதனைத்தான் பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களோ.
கிழக்கு, மத்தி,வடக்கு என சேர்மன் பொறுப்பு கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மேற்கிற்கு கொடுத்திருக்க வேண்டும் என்பது தானே இயல்பு. அதை ஏன் செய்ய வில்லை.
பரிமார் தெருவைச் சார்ந்த ஒருவர் அடிவாங்கிய போதும் காயல்பட்டணம் தஃவா சென்டரில் இருந்து ஒரு பெண் எனப் பார்க்காமல் கூட காவல் துறையினர் இழுத்துச் சென்ற போதும் ஊருக்குப் பொது எனக் கூறும் நம் ஐ.பே. எங்கே போனது.
ஐக்கியப் பேரவை வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இல்லை. ஐக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் தேர்ந்தெடுக்கும் முறையில் அமைந்திருந்தால் மட்டுமே அதன் கருத்தடை ஏற்க முடியும்.
எனவே தனது சொந்த அறிவையும் திறமையையும் அடிப்படையாக வைத்து ஊர் நலனை விலைப் பேசுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாத சகோதரி ஆபிதா அவர்களுக்கே புத்தக சின்னத்தில் வாக்களிப்பீர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross