Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byhasbullah mackie (dubai)[14 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10603
ஒரு வேண்டுகோள்....உங்களுக்கு போட்டியாக நின்று அவர்கள் யாரும் வெற்றி பெற்று விட்டால் அல்லது நீங்கள் வெற்றிபெற்றாலும் சரியே, ஊர் ஒற்றுமையை காக்க வேண்டும், இரண்டு சாரார்களும் எதிரிகள் அல்ல. அவர்கள் வந்தாலும் ஊருக்கு நன்மையை செய்வதற்காகத்தான்
இரண்டு பெரும் முஸ்லிம் சகோதரிகளே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.....
இரண்டு பேர்களையும் எதிரிகளாக நினைக்காமல் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.
நாளை மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் இதனை குறித்து கேள்வி கேட்கப்படும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும்....
இலஞ்சத்திற்கு துணை போகாமல் இருக்க வேண்டும்.....
வட்டியின் கொடுமை இல்லா நகரமாக விளங்க வேண்டும்....
ஏழைகளின் கண் துடைப்பதற்காக அவர்களை கண்டறிந்து சிறு தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்பத்டுத்த வேண்டும்....
தெரு விளக்குகள், சீரான குடிநீர் விநியோகம்,
சாலை வசதிகள், ஆட்டோகாரகளின் அதிவேகம் மற்றும் அவர்களின் சுய கட்டண உயர்வு ஆகியவைகளை கட்டுபடுத்த வேண்டும்.
அரசியல் சலுகைகளை நம்ம ஊர் மக்களும் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஊரில் உங்களை தேர்ந்தடுத்த மக்களுக்கு மனிதாபிமான முறையில்
பாகு பாடில்லாமல் செய்ய வேண்டும்....
அது முஸ்லிம் சகோதரராக இருந்தாலும் சரி அல்லது மற்றவர்கள் ஆனாலும் சரியே....
கடைசியாக ஒரு செய்தி, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவராக இருக்க வேண்டும்
" KULLUKKUM RAAYIN WAKULLUKKUM MASOOLUN AN RAIYATHIHI "
ஒவ்வொரு பொறுப்பு கொடுக்கபட்டவர்களுக்கு அவர்களின் பொறுப்பு குறித்து விசாரணை செய்யப்படும் என்ற நபி மொழியின் அடிப்படையில் செயல் பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross