ஒரு அன்பான வேண்டுகோள், posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[14 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 10604
ஒரு அன்பான வேண்டுகோள்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளாலும், பல சமுதாய அமைப்புகளாலும் நாம் நமது ஒற்றுமையை குழைக்கும் வகையில் பல்வேறு விதத்தில் நடந்து கொண்டோம். ஆனால் இப்போது உள்ளாச்சி தேர்தல் என்ற அரக்கன் நமது ஒற்றுமையில் விசம் தூவ வந்துள்ளான் அதற்கு யாரும் அடிமையாகிவிடாதீர்கள்.
ஐக்கிய பேரவை ஏதோ ஒரு நல்லெண்ணத்தில் இந்த விசயத்தில் தலையிட்டு இருந்தாலும் அதில் உள்ள சில நபர்கள் ஏதோ ஒரு விதத்தில் தவறான முடிவையே எடுத்துள்ளார்கள்.மேலும் பேரவை எது செய்தாலும் தொடர்ந்து பேரவையை பலர் விமர்சித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
இது அரசியல் இதில் அவர்கள் தலையிட்டே இருக்க கூடாது, அவர்கள் சமுதாய நலனிலும், பிரச்சனையிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் இது போன்ற விசயத்தில் எல்லாம் தலையிட்டு அவர்களை அவர்களே தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.
எத்தனையோ கண்ணியமிக்கவர்கள் எல்லாம் அதில் உள்ளார்கள். யாரோ செய்கின்ற தவறுக்கு இவர்கள் பொறுப்பாகிவிடக்கூடாது.
இன்றைய கால கட்டத்தில் தேர்தல் என்பது ஒரு வியாபார சந்தையாகவேதான் உள்ளது. எதை முதலீடு செய்தார்களோ அதற்கும் அதிகமான பலன்களை கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்படுவார்களே தவிர மக்கள் தொண்டே கதி என்றெல்லாம் இருக்க மாட்டர்கள்.
குறைந்தது தேர்தல் செலவுக்கு ஒருவர் 2 முதல் 5 லட்சம் வரை செலவு செய்தாறென்ரால் அதை அவர் முதலீடாகவே கருதுவார், மேலும் அதனை தொடர்ந்து 5 வருடங்கள் அவர் செலவிடும் நேரத்திற்கும் சேர்த்தேதான் அவர் லாபம் சம்பாதிக்க முயல்வார். பின்பு எப்படி லஞ்ச, லாவண்ய மற்றும், ஊழல், குடும்ப தலையீடுகள் இல்லாமல் இவர்களால் வேலை பார்க்க முடியும். அரசியல் என்பது அரசியலாகவேதான் உள்ளதே தவிர ஆர்வப்பணி யாக அது மாறாது.
இது தெரிந்தோ, தெரியாமலோ இப்படியெல்லாம் உறுதி மொழி கொடுத்தவர்களுக்காக இரு தரப்பினரும் தேர்தல் வேலை பார்ப்பதும், அவர்களுக்காக முட்டி மோதி கொள்வதும் நமக்கும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல.இப்படி மோதிகொள்வதற்கு அரசியல் கட்சிகளே களம் கண்டு இருக்களாமே?
அரசியலை பார்க்க அரசியல் கட்சிகள் இருக்கின்றன நாம் சமுதாயப்பணியை மட்டும் பார்ப்போம், வேண்டாம் இந்த அரசியல். எந்த ஒரு சூழ்நிலையிலும் அஞ்சா நெஞ்சனுக்கும், அம்மாக்கும் அடிபணிய வேண்டாமே. தயவு செய்து எந்த ஒரு அமைப்பும் யாருக்கும் ஆதரவு கொடுக்காதீர்கள் அது தேவை இல்லாத பின் விளைவுகளை ஏற்படுத்தும்.தேர்தல் என்று வந்து விட்டால், ஜமாத்தும், ஐக்கிய பேரவையும் இன்னும் பல சமுதாய அமைப்புகளும், காயல் நல மன்றங்களும் நடு நிலையையே நாடுங்கள்.
ஐக்கிய சபை நல்லெண்ணத்தில் கடந்த 3 முறை 3 தலைவர்களை கொண்டு வந்தது அதனால் யாருக்கும் லாபம் இருந்ததா? ஊருக்கு என்ன லாபம்? 15 வருடங்களுக்கு முன்பு ஊரின் கட்டமைப்பு, ஊரின் தேவைகள் எப்படி இருந்ததோ அது இன்னும் அப்படியேதான் இருக்கிறது எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
காயல் வெப்சைட் அட்மின் அவர்களே ஊர் நலனை கருத்தில் கொண்டு நீங்களும் செயல்பட வேண்டும். காடல் வெப்ச்சைட் நடு நிலை தவறியது இல்லை ஆனால் இன்று நடுநிலை தவறியது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. காயல் வெப்சைட் மூலமாக பிரிந்து கிடந்த நம் சொந்தங்கள் எல்லாம் ஒரே குடையின் கீழ் வந்தோம் இப்போது குடையில் ஓட்டை விழ நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள்.
சமுதாய நலன் கருதி சில செய்திகளை வெளியிட வேண்டாமே, மற்றும் சில செய்திகளுக்கு (சமுதாய நலன் கருதி) கருத்துக்களை வெளியிட அனுமதிக்க வேண்டாமே ( இந்த செய்திக்கு சமுதாய நலன் கருதி கமண்ட்ஸ் பதிவு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று ஹைலைட் செய்யுங்கள்). இதனால் தேவை இல்லாத கருத்து பரிமாற்றங்கள் மூலம் நமக்குள் நாமே பிளவுகளை ஏற்படுத்த வேண்டாமே.
ஒற்றுமையுடன் இருப்போம் !
ஒரு புதிய சமுதாயத்தை படைப்போம் !!.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross