Re:ஆபிதா இறுதிகட்ட பிரச்சாரம... posted byISMAIL(KTM ST) (HONG KONG)[16 October 2011] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 11001
அன்பு நெஞ்சங்களே,
கமென்ட் பகுதிகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தற்போது வளம் வந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
ஒற்றுமை ஒற்றுமை என போர்முழக்கம் கூறுபவர்கள் முதலில் தத்தமது குடும்பத்திலும் அக்கம்பக்கத்து வீட்டாருடனும் அது எப்படி உள்ளது என்பதை முதலில் கவனித்தால் ஊர் ஒற்றுமை தானாக வரும்.
முடுக்கு பிரச்னையிலிருந்து நிலத்துப் பிரச்னை வரை அருகில் உள்ள நீதிமன்றங்களை அலங்கரிப்பது நமதூர் வழக்குகள் தானே.
ஒற்றுமை பற்றி பக்கம் பக்கமாய் எழுதுவதையும் பேசுவதையும் விட அதை நாமே நம் வாழ்விலும் குடும்பத்திலும் நிலைநாட்டிவிட்டு பேச வேண்டும். இல்லையேல் இத்தகைய முழக்கங்கள் வெறும் சந்தர்ப்பவாத வார்த்தைகளாகவே கருதவேண்டி வரும்.
ஒரு பெண்ணை வேட்பாளர் என்ற அடிப்படையில் தெருவில் நிறுத்தி வாக்கு சேகரிப்பதும் மேடை ஏற்றிப் பேச வைப்பதும் தான் கலாச்சார சீரழிவு என மார்தட்டுபவர்கள்,
அவர்கள் ஆதரிக்கும் வேறொரு பெண் வெற்றி பெற்று யாரை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கும்; எங்கெல்லாம் போக வேண்டி வரும் என்பதை முதலில் நினைவில் நிறுத்திக் கொண்டு பேச வேண்டும்.
மெகா செய்தால் தவறாகத் தெரியும் கலாச்சாரச் சீரழிவு ஐக்கியப் பேரவை செய்தால் மட்டும் கலாச்சார பேரெழுச்சி ஆகிவிடுமா என்ன.
சகோதரி ஆபிதா அவர்கள் தம் சொந்த தேர்தல் அறிக்கையை தன்னம்பிக்கை யோடும் துணிவாகவும் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வரும் அதே வேளை சகோதரி மிஸ்ரிய்யா அவர்களோ ஐக்கியப் பேரவை எழுதிக் கொடுத்ததை கடம் அடித்தது போல படித்துக்காட்டி உள்ளார்.
ஆபிதாவின் தேர்தல் அறிக்கையை அப்படி இப்படி எனக் கூறிய வாய்கள் மிஸ்ரிய்யாவின் எழுதி வாசித்த அறிக்கையை மட்டும் ஆஹா ஓஹோ எனப்புகழ்கிறது.
ஆமா, சுனாமி பிரச்னை குறித்து ஏதும் வாயே திறக்கவில்லையே, ஐக்கியப் பேரவையின் ஆதரவாளர்கள் அதை அவர்களிடம் கேட்பார்களா.
அரசியல் தலையீடுகள் ஏதும் இத்தேர்தலில் இருக்காது என அறுதியிட்டு உறுதி கூறிய ஐ.பே. அதன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மட்டும் அரசியல் வாதிகளை அரங்கேற்றியது ஏன். உங்களின் சொல்லோடு செயல்கள் என்றைக்குமே ஒத்துப்போகாதா.
முன்னாள் தலைவரை அக்கூட்டத்தில் காணோம்.
யாரோ ஒருவர், அதான், ஒரு பணமுதலை, ( ஹூம்..........., பெயரைக்கூட சொல்லி விடலாம் என நினைக்கிறேன், ஆனால் அட்மின் கத்தரி போட்டு விடுகிறாரே) முழுக்காயலையும் தனது அதிகார வலைக்குள் வைத்திருக்கும் ரிங் லீடராக இருந்து கொண்டு,
பணத்தைக் கொடுத்து பணியாட்கள் மூலமாக வேலை வாங்கி காயலை ஒரு தாயக்கட்டமாகவே பார்த்து வருகிறார்.
அ.தி.மு.க. வின் அன்வர் காக்கா அவர்களே,
சென்ற முறை நடந்த சட்ட மன்ற தேர்தலில் ஐக்கியப் பேரவை தி.மு.க. வை ஆதரித்த போது, ஒற்றமையை வலியுறுத்திய நீங்கள் மட்டும் அ.தி.மு.க. விற்கு வாக்கு சேகரித்தீர்களே. உங்கள் அகராதியில் ஒற்றுமை என்பது இதுதானா.
கள்ள ஒட்டு என எச்சரிக்கையில், பலர் குய்யோ முறையோ என கூச்சலிடுகின்றனர்.
சென்ற முறை நடந்த தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கத்தை கத்தையாக பணத்தை இறக்கி அதன் மூலம் வாக்கு சேகரித்ததே அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா. வாழ்க தேர்தல் கமிஷன். அது மட்டும் இல்லாவிடில் நம்மூர் படும் பாடு சொல்லி மாளாது.
இதற்கு மாறாக நம்மூர் பொது நலவாதிகள் (?) நம்மூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு CT SCAN, MRI SCAN எனக் கேட்டிருக்கலாமே. நமது மக்கள் நலத்திற்கு ஆக்கப் பூர்வமான வழியை ஏற்படுத்தி இருந்தால் ஐக்கியப் பேரவையை அனைவரும் பாராட்டி இருப்பர்.
சகோதரி மிஸ்ரிய்யா சொல்லும் போது என் சகோதரருக்கு சிதம்பரத்தையும் அவர் மனைவி நளினியையும் தெரியும் என்றார். ஆனால் மாநிலத்தில் ஆட்சி வகிக்கும் அம்மாவுக்கு இவர்களைப் பிடிக்காதே.
சரி இப்போது தேர்தலுக்காக இவ்வாக்குகளைக் கொடுக்கும் சகோதரிக்கும் அவர் சகோதரருக்கும் ஏற்கனவே பல காலம் அவர்களை எல்லாம் தெரியத்தானே செய்யும். அப்போதெல்லாம் அவர்களின் இத்தொடர்பை பயன் படுத்தி இவ்வூருக்கு எதையாவது செய்ததுண்டா.
நுஸ்கி காக்கா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
வலைதளத்தில்
சிலரது வார்த்தைப் பிரயோகங்கள் நன்றாக இல்லை என்பதை நீங்கள் பதித்ததைத் தொடர்ந்து அடுத்த கமெண்டிலேயே அதை மாற்றிக் கொண்டார்கள்.
ஆனால் சகோதரி ஆபிதாவைப் பற்றி எதிரணியினர் இப்போதும் தவறாக பேசி வருகிறார்கள். அவர்களிடமும் தாங்கள் சொல்லி திருத்துங்களேன்.
ஐக்கியப் பேரவையில் ஒரு வெளிப்படையான செயல்பாடு இல்லை. மிகவும் சந்தேகத்திற் குட்பட்ட நிலையிலேயே அவர்கள் ஒவ்வொரு நகர்வுகளும் அன்றிலிருந்து இன்றுவரை அமைந்திருக்கின்றன. ஜோசப் சாச்சா அவர்களை ஏற்றிய மேடையில் ஐ.பே. க்கு எத்தனையோ மாற்று மத நண்பர்களைத் தெரியாமல் போனது எதனால்.
சமீபத்தில் காக்கும் கரங்கள் என்ற அமைப்பு பெயரால் நடத்தப்பட்ட கூட்டமும் ஏற்கனவே கூறிய அந்த பண முதலையின் ஏற்பாடுதான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகப் போய்விட்டது.
காலங் காலமாக பற்பல நன்மைகளைச் செய்து வரும் Y.U.F. சங்கத்திலிருந்து அதே அளவு சமூக சேவை புரிந்து வரக்கூடிய சகோதரர் முஹ்யித்தீன் அவர்களை அவமானப்படுத்தி பேசமுடியாமல் அனுப்பிய அவர்களின் செயல் கண்டனத்திற்குரியது.
காக்கும் கரங்கள் எப்போது முதல் அந்த தனி நபர் கரங்களால் காக்கப்பட்டு வருகிறது என்பதையும் ஊர்மக்களுக்கு தெரிவித்தால் நலமாக இருக்கும்.
கடைசியாக, சகோதரி ஆபிதா அவர்கள் ஒரு செயலாற்றும் திறன் கொண்ட, அறிவாற்றல் மிக்க, சுயமாகவே சிந்தித்து முடிவெடுக்கும் திறமையான பெண்மணி.
ஒரு தலை சிறந்த நிர்வாகியும் கூட.
தயவு செய்து அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்.
அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நன்கு அறிந்தே களத்தில் நிற்கிறார்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி ஊர்மக்கள் அனைவரும் அவரையே தேர்ந்தெடுப்பீர்.
தண்ணீரை நமக்கு வழங்கி கண்ணீரைத் துடைப்பார். அறிவை வழங்கி அறியாமையை ஒழிப்பார். சுற்றுச்சூழலில் மிகுந்த கவனம் செலுத்தி கட்டுப்பாட்டினை விதிப்பார். இன்னும் பல நல்லவற்றை இடர்களின்றி செய்வார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross