செய்தி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம்மை நாம் பரிசோதித்து கொள்ள வேண்டும். posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[29 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12403
மெகா அமைப்பினரே நீங்கள் நகர்மன்றத் தலைவருக்கு பாராட்டு எடுப்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் .முதலில் நாங்கள் தான் உங்களுக்கு பாராட்டு எடுக்க வேண்டும் . எந்த வித சுயநல நோக்குமில்லாமல் ஊரின் பொதுநலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட்ட உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறி நிறுத்தி கொள்ள என் மனம் விரும்பவில்லை.
இங்கு நுனிப்புல் மட்டுமே மேய்ந்து கருத்து எழுதும் சிலரை போல் நானும் மெகாவின் மீது என்னுடைய விமர்சனத்தை கூறினேன் இரு வேட்பாளரில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லிய பொழுது . ஆனால் அதன் பிறகு உண்மை நிலையை கேட்டறிந்த பொழுது தான் என்னுடைய தவற்றை உணர்ந்தேன் அதற்காக வருந்தி என்னுடைய கருத்தில் மண்ணிப்பும் கேட்டேன் . தவறை உணர்பவன் தானே மனிதன் .
இங்கு உங்களை கூறும் அந்த நபர் என்னையும் ஒரு இடத்தில தனிப்பட்ட முறையில் குழப்பவாதி என்று கூறினார் . அதை நான் பெரிதாக்க வேண்டாம் என்று கருதி மின்னஞ்சல் மூலம் மிகவும் கண்ணியமான முறையில் பதில் கூறி விடைபெற்றேன். பிறகு அவரை பற்றி மற்றவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன் . அதன் பிறகு அவருடைய கருத்துகளை நான் பெரிதாக்க எடுத்து கொள்வதில்லை .
ஆனால் இவருடைய விமர்சனங்கள் வேறு கோணத்தில் செல்வதால் நாம் இப்படியே விட்டுவிடுவது சரியில்லை "
"கடைசியாக.... kayalpatnam.com தம்பி SK ஸாலிஹ் அவர்கள் ஒரு தலைபட்சமாக சகோதரி ஆபிதா அவர்களின் வெற்றிக்கு முன்னும், வெற்றி அடைந்த பின்பும், இன்றுவரையிலும்.... இந்த வலைதளத்தில் செய்திகளை வெளியிட்டதனால். (குற்றம் சுமத்தவில்லை... உண்மையைத்தான் எழுதுகிறேன்!) "(cut&paste)
நானறிந்த வரை, தேர்தல் நடக்கும்போது இரு தரப்பு செய்திகளையும் விருப்பு வெறுப்பின்றி வெளியிட்டார் அவர். தேர்தல் நிறைவுற்ற பின்னர், யார் நகர்மன்றத் தலைவரோ, அவர் செய்யும் பணிகளைத்தான் செய்தியாக வெளியிட முடியும். அந்த இடத்தில் ஆபிதா லாத்தா இல்லாமல் மிஸ்ரியா லாத்தா வெற்றி பெற்றிருந்தாலும் அப்போதும் இதைத்தான் எஸ்.கே.ஸாலிஹ் காக்கா செய்ய வேண்டும். அந்த அடிப்படையில்தான் செய்தியை வெளியிடுகிறார்.
பேச்சுக்கு பேச்சு ஒற்றுமை என்றார் கூறுகின்றீர்களே தவிர நீங்கள் எழுதும் எழுத்துகளில் ஒற்றுமையை பிரிக்கும் சொல் பிரயோகங்கள் மட்டும் தான் தலைவிரித்து ஆடுகின்றது .
ஆகவே நாம் அடுத்தவரை குறை கூறும் முன் நம்மை நாம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross