பசுமையான பள்ளிப் பருவ நினைவுகள் posted byW.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் (சென்னை)[29 October 2011] IP: 110.*.*.* India | Comment Reference Number: 12498
உங்களில் சிறந்தவர் யாரெனில் "தானும் கற்று அதனை பிறருக்கு கற்றுக் கொடுப்பவரே (ஆசிரியர்)" என்ற வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத பொன்மொழிக்கேற்ப சிறப்பான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் ஆசிரியர் திரு. தேவராஜ் மற்றும் என் பால்ய அன்பு நண்பன் முஹம்மது அபூபக்கரின் தந்தை மதிப்பிற்குரிய புஹாரி சார் ஆகியோர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இவர்களைப் பற்றி நினைக்கும் பொழுது என் மனம், அந்த பசுமையான மேல்நிலை பள்ளிப் பருவ நாட்களை எண்ணி அசைபோட 19 ஆண்டுகள் பின்னோக்கி செல்கின்றது.
தேவராஜ் சார் அவர்கள் - எவ்வித தங்கு தடையின்றி தெளிவான உச்சரிப்புடன் மிக சரளமாக ஆங்கில பாடம் நடத்தும் நேர்த்தியே தனி அழகு தான். புஹாரி சார் அவர்கள் - இன்முகத்துக்கு சொந்தக்காரர், இன்று வரை எப்போது சந்தித்தாலும் மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர். பன்முக ஆற்றல் ஒருங்கே அமையப் பெற்றவர். இவரின் கல்விப் பணி மென்மேலும் சிறப்புற்று விளங்கி நமதூருக்கு சிறந்த கல்விச் சேவையாற்றிட, அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான செல்வத்தையும் கொடுக்க மனமுவந்து துவா செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross