Re:காயல்பட்டினத்தில் துணை மி... posted bySalai. Mohamed Mohideen (USA)[03 November 2011] IP: 64.*.*.* United States | Comment Reference Number: 12876
நமக்கு தெரியாத மற்றும் நாம் எவரும் அறிந்திட கூட முயற்சி செய்யாத ஒரு விசயத்தை இந்த இணையதளம் வழக்கம் போல் நமக்கு சேகரித்து...அறிய தந்துள்ளது என்று தான் எனக்கு நினைக்க தோனுகிறது. இதில் பேரவையை குறை சொல்வதற்கான முயற்சி அல்லது எண்ணம் இருப்பது போல் தோணவில்லை.
சம்பந்த பட்டவர்கள் இதை கவனிக்க/நடைமுறை படுத்த தவறியது ஒரு பக்கம் இருந்தாலும் அட்லீஸ்ட் இனிவரும் காலங்களில் இதை நாம் ஒரு படிப்பினையாக (அதாவது ஒரு சிலர் சொன்னார்கள் என்பதற்க்காக இல்லாமல், ஊர் சம்பந்த பட்ட நல்லவிசயங்களை நமக்கு வழங்க பட்டு இருக்கும் தகவல் அறியும் சட்டம் மூலம் மிக நன்றாக அறிந்து ஆராய்ந்து) நாம் எடுத்துக்கொண்டு செயல்படலாம். அதையே நாம் தவறு/குறை என்று கூறினால் எப்படி?
ஒரு வேளை, இதே விசயத்தை நம்மில் எவரும் (ஏன்...இங்கே குறை கூறும் அன்பர்கள் உட்பட்டு) இந்த விபரங்களை சேகரித்தாலும் சமுக அக்கறையுடன் இதே அணுகுமுறைதானே கடைபிடித்து/தெரிய படுத்தி இருப்போம்.
மீடியா தன் நடுநிலமையான பணியை செய்யும்போது , எந்த ஒரு அமைப்பின் தவறுகளை சுட்டிக்காட்ட வர வேண்டியது வரும். அதற்காக மீடியாவும் அந்த ஒரு அமைப்பும் எதிரிகள் என்று அர்த்தம் இல்லையே. ஒரு வேளை இதை நமது மக்கள் சேவா கரங்கள் தலைவர் ஜலாலி காக்கா செய்து இருந்தால் பாராட்டி இருப்போம், காயல்.காம் செய்ததினால் குறை கூறுகிறோமோ என்னவோ.
பேரவையின் நல்ல விஷயங்களை பாராட்டும் நம்மில் நிறையபேர் அதன் தவறான ஒரு சில அணுகுமுறைகளை/முடிவுகளை சுட்டிக்காட்ட முயலும்போது, ஒரு சில "குறிப்பிட்ட அன்பர்கள்" ...ஏதோ நாம் அனைவரும் பேரவையின் மீது அக்கறையற்றவர்கள் போல தவறாக புரிந்து கொண்டு, பேரவையின் எந்த ஒரு செயல்பாட்டையும் எப்படியாவது நியாயபடுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, நம் பேரவையை ஆக்கமான முறையில், எல்லோரையும் எந்த ஒரு பாகுபட்ச்சமின்றி அரவனைத்து செல்வதில் மற்றும் அதை வலுபடுத்துவதில் காட்டினால் மிக நன்றாக இருக்கும். அதற்கான முயற்ச்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம்.
நாம் எல்லோரும் பலமுறை சொல்லிவரும் கருத்தும்/ஆசையும் & ஜியாவூதீன் காக்கா சொன்னது போல்..
"நம் ஐக்கிய பேரவை மிகவும் வலுவான அமைப்பாக மாறனும்/மாற்றப்படவேண்டும். அதற்கு ஒவ்வொரு ஜமாத்தும் வலுவானதாக அமையனும். எல்லா ஜமாத்தினர் மற்றும் கொள்கை உள்ளவர்கள் பிரநிதித்துவம் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை கை காட்டினால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கனும். அப்படி ஒரு நிலைமை வரனும் என்றால் நம் ஐக்கிய பேரவை அதன் நன்பகத்தன்மையை உறுதிப்படுத்தனும், கொள்கை வெறி இருக்கக்கூடாது, தனி நபர்/வாட்டார வழி ஆதிக்கம் இருக்கக் கூடாது,ஆக மொத்தம் வல்ல ரஹ்மானுக்கு பயந்து மக்களுக்கு சேவை செய்யணும்"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross