Re:காயல்பட்டினத்தில் துணை மி... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATINAM)[04 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 12897
அரசு நடைமுறை திட்டங்களில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதையே இத்தகவல் சுட்டி நிற்கிறது.
ஆன்னல் நமது பொறுப்புள்ள பெரியவர்கள் பணத்தை அப்படி வீணாக்கி இருக்கமாட்டார்கள் என்பதே நமது நம்பிக்கையும். சரியான புரிதல் இன்றியோ அல்லது தகுந்த வழிகாட்டுதல் இன்றியோ இது நடந்திருக்கலாம்.
அது மட்டுமில்லாமல் அரசு ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு அளவுகோலையும் பின்பற்றுகிறது. இது அரசு நிர்வாகத்தோடு அன்றாட உறவு வைத்திருப்பவர்களுக்கு தெரியும். அதிகாரிகளை கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று முடித்துக்கொள்வார்கள்.
ஆனால் இது சம்பந்தமாக எல்லா விபரங்களும் தெரியவந்த பிறகும் பேரவையினர் இதுபோன்று நடந்திருந்தால் அது நிச்சயம் தவறுதான். நமது பணத்தை இன்னொருவருக்கு தூக்கி கொடுப்பதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்?
எனவே இது சரியான வழி காட்டுதல் இன்றி நடந்த ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
தவறுகள் நடக்கும் போது அதை சுட்டிக்காட்டுவதுதான் ஊடக தர்மம். எனவே இதை பேரவைக்கு எதிரான செயல் என்று மட்டும் பாராமல் ஒரு பொதுநலன் கருதிய ஊடக செயல்பாடு என்று மட்டும் பார்த்தால் இதில் எந்த மனமாச்சரியங்களுக்கும் இடமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross