செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Live and let live. posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[17 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 13467
Ref: Comment # 4
"ஜமாத்துகள் , பொதுநல அமைப்புகள் , பொதுமக்கள் ( இவர்கள் ஜமாத்துகள் , பொதுநல அமைப்புகளில் சேராதவர்களா என்று தெரியவில்லை ) " - Copy & Paste.
(ஜமா-அத்களிலிருந்தும், பொதுநல அமைப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர) 25 பேர்கள் உள்-தேர்தலுக்காக தேர்ந்தேடுக்கப்பட்டார்களே அந்த நேரத்தில் (2 மாதங்களுக்கு முன்) கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி. ஒருவேளை பலர் இந்த கேள்வியை அந்த நேரத்தில் கேட்டதால் இப்போது இதைக் கேட்பவருக்கு அந்த நேரத்தில் கேட்கத்தோன்றவில்லை போலும்.
காசு வாங்கினாலும் பரவாயில்லை எங்கள் கவுன்சிலர் எங்கள் வார்டுக்கு நன்றாக வேலை செய்தார் என்ற எண்ணம் மக்கள் பலரிடம் பரவலாக இருக்கிறது. அந்த எண்ணம் சுத்தமாக அகற்றப்பட வேண்டும். இந்த எண்ணமே எலிகளை பெருச்சாளிகளாக மாற்றுகிறது. இன்ஷா-அல்லாஹ், இந்த எண்ணத்தை மாற்றுவதற்க்காகவும் வருங்காலங்களில் "மெகா"வின் செயல்பாடு (விழிப்புணர்வைத் தூண்டும் கூட்டங்கள்) தொடரும்.
----------
Ref: Comment # 6
"சாக்கடை இருக்கும் இடத்தில் சனியன்கள் (கட்டை கால்கள்) இருக்கத்தானே... செய்யும்? " - Copy & Paste.
பன்றிகளை பன்றிகள் என்றே கூறுங்கள். அதில் தவறில்லை. அது ஒரு Tamil Dictionary word. இதை சொல்வதனால் வாய் ஒன்றும் அசுத்தமாகிவிடாது, (Type செய்வதனால் Keyboard / Monitor அசிங்கமாகிவிடாது). பன்றிகளைவிட கேடுகேட்டவர்கள்தான் இலஞ்சம் வாங்கக்கூடியவர்கள். இந்த கேடுகேட்டவர்களை பணம் படைத்தவர்களில் சிலர்தானே உருவாக்குகிறார்கள். சுருக்கமாகக் சொல்வதானால் வேலியாய் இருப்பவர்களில் சிலர் பயிரை மேய்கிறார்கள்.
இவர்கள் திருந்தவேண்டும். இல்லையேல், இன்ஷா -அல்லாஹ் திருத்தப்படுவார்கள்.
No one can do EVERYTHING; but everyone can do SOMETHING and if everyone join together, they can do MANY THINGS. Therefore , "Live and let live"
------------------------
"மெகா" ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அழைப்புகள் கொடுக்கப்பட்டும் சில கவுன்சிலர்கள் வரவில்லை. அவர்களுக்கு தவிர்க்கமுடியாத பல / சில அலுவல்கள் இருந்திருக்கலாம். அல்லது நகர்மன்றம் பற்றிய விழிப்புணர்வு நிறைய இவர்களுக்கு இருந்திருக்கலாம். இந்த கூட்டத்திற்கு வராததை மட்டும் வைத்து அவர்களை குறை கூற இயலாது.
சகோதரி ஆபிதா அவர்கள் துளிர் அரங்கில் ஏற்பாடு செய்த "Get to gather" நிகழ்ச்சியிலும் வராத, KWT ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளாத கவுன்சிலர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால் "மடியில் கணம் இருப்பதனால்தான் வழியில் பயம் இருக்கிறது" என்று பலர் கூறுவது என் காதிலும் விழுந்தது.
"குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்" என்று சொல்லுவார்களே அதுதான் இதற்கு அர்த்தமோ?
--------- END ----------
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross