செய்தி: ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்... posted byM.I.மூஸா நெய்னா (மதினா முனவ்வரா)[17 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13523
முதற்கண் மெகா அமைப்புக்கு எனது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அளவுக்கு நகர் மன்றத்தில் அசிங்கங்கள் முந்தைய காலங்களில், இப்பொழுதும் தொடர்கின்றது என்பதை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. உங்களது ஒவ்வொரு statement ம் ஒவ்வொரு சம்மட்டி அடியாக உள்ளது. உங்கள் பணி தொடர வேண்டும்.
தேர்தல் நேரத்தில் உங்கள் நிலைப்பாட்டில் குறை கண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் , இப்பொழுது நீங்கள் செய்திருக்கும் விழிப்புணர்வு சேவை மிகவும் உன்னதமானது. அதற்குண்டான கூலி அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக உங்கள் அனைவர்களுக்கும் உண்டு. ஆமீன்.
இதனை இத்தோடு விட்டுவிடாமல் நீங்கள் சொன்ன எல்லா விஷயத்தையும் ஒரு மனுவாக நகர்மன்ற தலைவியிடம் கொடுத்து அவைகளை போர்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம்.
மேலும், உங்களில் நன்கு விஷயம் தெரிந்த ஒருவரை நகர்மன்ற கண்காணிப்பு பிரதிநிதியாக தெரிவு செய்து, அவர் மூலமாக அவ்வப்போது அறிக்கையாக நோட்டீஸ் மூலமாகவோ,இனையதளம் மூலமாகவோ மக்களுக்கு தெரியபடுத்தலாம். அப்படி செய்தால் தான் நம்மை கண்காணிக்க ஆட்கள் உண்டு என்ற பயம் மன்ற உறுப்பினர்களுக்கும் (தலைவி உட்பட), அலுவலர்களுக்கும் உண்டாகும்.
அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருக்கும் பயந்தோ, சாதகமாகவோ செயல்பட வேண்டாம் என்பதை தெரிவித்து, மீண்டும் ஒரு முறை நன்றியையும் பாரட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross