செய்தி: புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதிய நகர்மன்றத்தின் முதல... posted byVilack SMA (Siacun)[18 November 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 13524
சகோதரர் AWS சொன்னதுபோல , அங்கே சகோதரிக்கு " எதிரான " வேலைகள் ஒன்றும் ஆரம்பிக்கவில்லை . அனைவரும் " எதிரெதிரே " அமர்ந்துதான் பேசிக்கொண்டனர் .
அடுத்து , சகோதரர் எண்ணப்படி , நம் நகராட்சியில் experience and expertise இல்லைதான் . அதேசமயம் இவை இரண்டும் உள்ள தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு இந்த வாய்ப்பை வழங்கலாம் . அனால் அங்கும் ஊழல் இருக்குமே ! ஆக , ஊழல் என்பதை அதிகம் பேசாமல் , காக்கா சொன்னதுபோல் experience & expertise எங்கு இருக்கிறதோ அவர்களை அணுகுவதே மேல்.
மேலும் , நகராட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த வேளையில் expertise இல்லாதபோது , தலைவி இதை மறுபரிசீலனை செய்யலாம் என்று அனைவரும் ஒத்துக்கொண்டது வரவேற்கத்தக்கது .
பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்ச்சி இன்னும் வேண்டும் . இதை உபயோகிப்பவருக்கு விதிக்கும் அபராதத்தை விட , இதை விற்பனை செய்பவருக்கு அபராதம் போடுவதுதான் சிறந்தது .
ஊரில் இருக்கும் திருமண மண்டபங்கள் , சமுதாய அரங்குகளில் , திருமணம் , விருந்துகள் முடிந்த பிறகு , அந்த பகுதியில் தெருக்களில் குப்பை கூளங்களை பார்க்க வேண்டுமே . கண்கொள்ளா காட்சி . நகர் மன்றம் , இவற்றை சுத்தம் செய்ய சம்பத்தப்பட்ட திருமண வீட்டாரிடம் ஒரு சிறிய தொகையினை பெறலாம் . ( கோபப்படாதீர்கள் , நீங்கள் செய்யும் பல லட்சம் செலவில் , இது சில நூறு ரூபாய் தான் வரும் )
அடுத்து , செண்பகவல்லி அம்மா , இவ்வளவு நாளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? சென்ற முறை , உங்கள் பள்ளி நிர்வாகத்தின் உறவினர்தானே ஆட்சியில் இருந்தார் . அப்போது முறையிட்டிருக்கலாமே ? சுபைதா பள்ளிக்கு அருகில் தடுப்புச்சுவர் கட்டியது போல் ( மாணவிகளை காப்பாற்றி , பலரை மருத்துவ செலவுக்கு ஆளாக்கி இருக்கிறது இந்த speed breaker என்ற தடுப்பு சுவர் ) இங்கும் கட்டி இருக்கலாமே ? நகர் மன்றத்தில் ஏற்கனவே இதை சொல்லியாகி விட்டது . கொஞ்சம் பொறுத்திருங்கள் . உங்கள் பள்ளிக்கும் இந்த தடுப்பு சுவர் கிடைக்கும் . உங்கள் பள்ளி மாணவர்கள் , bicycle ஐ தெருவில் நிறுத்துகிரார்களே , இது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதே , இதற்கு நீங்கள் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய கூடாதா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross