செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல... posted byJahangir (Kayalpatnam)[24 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13744
1-வது வார்டு உறுப்பினர் சகோதரர். லுக்மான் அவர்களிடம் 5-வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கிர் கோரும் விளக்கம்.
இங்கு 1-வது வார்டின் உறுப்பினர் சகோதரர் லுக்மான் அவர்கள் ஒரு அற்பத்தமான கருத்தை பதிந்திருந்தார்கள். இதை வாசிப்பவர்கள் அவரை உண்மையின் உரைகல், அல்லாஹ், ரஸூலுக்கு அடுத்தபடியாக அவர்தான் சத்திய இஸ்லாம் வழியில் செல்கிறார். இவரைப்போல் மற்ற உறுப்பினர்கள் இல்லை என்று நம்புவதற்காக மிகவும் அழுக்கான முறையில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.
1) இவன் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்கமாட்டன். என்னைப்பற்றி ஒரு வுறுப்பினர் இன்னொரு வுருப்பினரிடம் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார் அவருக்கு என் நன்றி.
என்று கூறியுள்ளீர்களே? அப்படி யார் எதை வாங்கினார்? நீங்கள் எதை தடுத்தீர்கள்? அந்த உறுப்பினர் உங்களை இப்படி சொல்வதற்கு? நீங்கள் தான் உண்மையின் உரைகல் ஆகிற்றே அதையும் வெளியிள் கூறலாமே? சும்மா பெயர் வாங்குவதற்காக மற்றவர்கள் மீது குறைகூற வேண்டாமே? அப்படி சம்பவம் உண்மை என்றால் வெளிப்படையாக கூறவேண்டியதுதானே?
2) இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள் காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள். நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே இருக்கலாம். ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே. ஒருவேளை தன்னை விட யாரும் நல்லவர் என்ற பெயர் எடுதுவிடக்கூடதே பயமோ என்னவோ.
அப்படி எந்த ஊழல்வாதிக்கு துணை போனார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா? நகராட்சி துவங்கி இன்னும் பணிகளே சரிவர நடைபெறாத நிலையில் அப்படி யார் ஊழல் செய்து விட்டார்கள்? நீங்கள் பணி நியமனக்குழுவில் போட்டியிட்ட பொழுது உங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்ற காரணத்தினால் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போனார் என்று கூறுவதா? ஊழல் பேர்வழிகள் என்று கூறுகின்றீர்களே? அப்படி என்றால் உங்களை எதிர்த்து வாக்களித்த 11 உறுப்பினர்களும் ஊழல்வாதிகளா? அவர்கள் செய்த ஊழலை நிருபிக்க முடியுமா ? உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லோர் மீதும் பழி சுமத்துவதா ? இதுதான் நீங்கள் நேர்மையானவர் என்று மக்கள் நம்புவதற்கு கிடைத்த பரிசா ?
சரி தாங்கள் பணி நியமனக்குழுவில் போட்டியிட விரும்பி துணை தலைவர் தேர்வு முடிவுற்றதும் மற்ற உறுப்பினர்களிடம் கூறிய வாக்கு என்ன? நம் சமுதாயத்தவர் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக போட்டியிட மாட்டேன் என்றுதானே கூறினீர்கள்? தற்போது ஜனாப்.சாமு சிஹாபுத்தீன் அவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? எதற்காக அவரை எதிர்த்து போட்டியிட்டீர்கள்.
Moderator: Comment edited!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross