Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byCnash (KTM தெரு) (Makkah )[14 December 2011] IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14557
அஸ்ஸலாமு அலைக்கும்,
ரெம்ப பரந்த மனப்பான்மையுண்டன், மிகுந்த பொது நல நோக்குடன் அறிக்கை விட்டு இருக்கிறார்கள்!! நல்ல வெளங்கும்!! இது போல மற்ற நாலு ஜமாத்துக்களும் நினைத்து இருந்து உங்களை போலவே பிடிவாதம் பிடித்து இருந்தால் இன்னைக்கு ரயில்வே ஸ்டஷனுக்கு போறமாறி பஸ் பிடிக்கவும் இன்னொரு மினிபஸ் புடிச்சி ஆறுமுகநேரிக்கோ, இல்லை அடைக்கலாபுரத்துக்கோ போக வேண்டி இருந்து இருக்கும்!! அப்படி எல்லாம் நடக்காமல் KTM தெரு, மெயின் ரோடு, ஹாஜி அப்பா தெரு மக்கள் எல்லாம் பெருந்தன்மையோடு ஒத்துகொள்ள போய்தான் இன்றைக்கு அறிக்கை விடுபவர் முதல் ஆதரிப்பவர் வரை பஸ் இல் ஈசியா போயிட்டு வந்துகிட்டு இருக்க முடியுது.
அப்படி அவர்கள் பெருந்தன்மையாக விட்டு கொடுத்ததற்கு பரிசாக அவர்கள் வீடு, கடைகளை இப்போ இடிக்க விட்டு கொடுத்து, ரோட்டை விரிவாக்கம் பண்ணனுமாம். இவங்க நோகாமே நொங்கு தின்பான்கலாம்!! நல்ல இருக்கு உங்க விவாதம்.
KTM தெரு, மெயின் ரோடு, மக்கள் வீட்டை இழக்கலாம் ஆனால் உங்கள் பிள்ளைகள் விளையாட ரோடு வேணும், உங்கள் கல்யாணத்துக்கு தெருவை அடைச்சி பந்தல் போட இடம் வேண்டும், இந்த தலையாய பிரச்சனைகளை விட்டு கொடுக்கமாட்டீங்க, ஆனால் மத்தவங்க தலையே போனாலும் உங்களுக்கு கவலை இல்லை.
அவர்கள் ஜமாத்தை சார்ந்த சின்ன நெசவு தெரு மக்கள் தியாகம் செய்து இருக்கிறார்களாம்....1975 முதல் (எங்களுக்கு தெரிந்து) பேருந்து போக்குவரத்து KTM தெரு வழியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது!! அந்த வேளைகளில் நீங்க சொன்ன சின்ன நெசவு தெருவில் மிஞ்சி போனா 4 ,5 வீடுகள் தான் அமைத்திருக்கும்... ஆனால் KTM தெருவும் மெயின் ரோட்டின் அமைப்பும் இப்போது இருந்தது போல தான் இருந்தது.... யாரும் அரசு நிலத்தையோ நெடுஞ்சாலை துறை நிலத்தையோ அபகரித்து வீடோ, கடையோ கட்ட வில்லை என்பது, 1970 துக்கு முன் கட்டபட்டு இன்றும் இருக்கும் வீட்டில் அமைப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மாறாக அரசே ஒரு வரம்பை நிர்ணயித்து நெடுஞ்சாலை துறைக்கு என்று பிற்காலத்தில் வரைமுறை வைத்தால் ..சில வீடுகளின் முகப்பு, சில கடைக்கள் என்று பலவற்றை ஊரின் நன்மைக்காக இழக்க வேண்டியது வந்தது!!
இன்னும் விரிவாக்கம் என்ற பேரில் இருக்கிற வீட்டை ஒட்டு மொத்தமாக இழக்க யாரும் தயாராக இல்லை!! போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான வசதிகள் ஒரு வழி பாதை மூலம் இருக்கும் போது இருக்கிற இடத்தையும் இன்னும் விட்டு கொடுத்து விட்டு தான் எங்கள் பெருந்தன்மையை காட்டனும் என்ற எந்த அவசியமும் KTM தெருவில் வாழும் எங்களுக்கு இல்லை.
பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்தி ஊர் நலனுக்காக கொஞ்சம் தூர நோக்கில் தயவு செய்து சிந்தியுங்கள்.. நீங்கள் சொல்லும் எல்லா காரணமும் எல்லா தெருவுக்கும் பொருந்தும்!! பெரிய நன்மைகள் கிடைக்கும் போது, தெருவை அடைத்து பந்தல் போடுவதும், பிள்ளைகள் ரோட்டில் விளையாடுவதும் ஒரு பொருட்டல்ல!! விட்டு கொடுத்தோர் கேட்டு போக போறதில்லை!! அதை போல குட்ட குட்ட குனிந்து கொண்டு நாங்களும் எங்கள் உரிமைகளை முழுவதுமாக விட்டு கொடுத்து விட்டால் KTM தெரு முன்வீட்டு மக்கள் இனி ஒரு அறை வீட்டில் தான் வாழ வேண்டும்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross