Re:தமிழக அரசின் விலைவாசி உயர... posted bySalai. Mohamed Mohideen (USA)[14 December 2011] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 14558
தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்வதில் தீமுக-வுக்கு நிகர் தீமுக-வே தான் என்பது நகரச் செயலாளர் உரையிலிருந்து மிக தெளிவாக தெரிகிறது. தேவை இல்லாமால் வேலியில் போன ஓணானை.......விட்ட கதையாய், மேகாவை வம்புக்கு இழுத்து இருப்பது.
இன்று நாங்கள் ஆட்சியிலிருப்போம்... நாளை அதிமுக இருக்கும்... நாங்கள் மாறி மாறி "ஊழல்" செய்கிறோம்...செய்து கொண்டே இருப்போம் என்று சொன்னால் மிக சரியாக இருக்கும். இந்த மேடையில் இருக்கும் அல்லது வாய் கிழிய பேசுபவர்களில் எத்தனை பேர் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள்?????
எதற்க்கோ மேடை போட்டு விட்டு "மெகா" வை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதனை முதலில் சொல்லுங்கள். "பொது ஜனத்திற்கு" நன்றாக தெரியும்...யார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று.
"த்தனையையும் செய்த காரணத்தால்தான் துணைத்தலைவராக எங்கள் கட்சியைச் சார்ந்த மும்பை முகைதீன் தேர்வு செய்யப்பட்டார்... " -- சென்னை ஆண்டவரின் Blessings இல்லேனா ஜெயிச்சு இருப்பார்னு என்று நம்மால் உறுதியா சொல்ல முடியுமா???
"நான் தேர்தலில் போட்டியிட்டது என்னவோ சுயேட்சையாகத்தான்... ஆனால் இவன் திமுக காரன் என்றுதான் எங்கள் நெற்றியிலேயே ஒட்டியிருக்கிறதே...? " ----
ஊர் ஓற்றுமைக்காக நாங்கள் நகராட்சி மன்ற தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட வில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு திரியும் இவர்கள், மறுபக்கம் வெற்றி பெற்றவுடன் தங்கள் சுயருபத்தை (அதாவது கட்சிக்காரன்...அதற்க்காகத்தான் மக்கள் ஒட்டு போட்டு எதோ வெற்றி பெற்ற மாதிரி) காண்பிக்கிறார்கள். இதை ஒருவேளை தேர்தலுக்கு முன்னே இதை சொல்லி இருந்தால் டெபாசிட் இழந்து இருப்பார்கள். இந்தா பீலாவை மட்டும் வெட்டி பந்தாவை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு உங்க வார்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்யுங்களேன்...ப்ளீஸ்!
முதலில் இவர்களுக்கு தங்களுடைய கடமைக்கும் சாதனைக்கும் வித்தியாசமே இந்த அரசியல்வாதிகளுக்கு தெரிய வில்லை. MLA /MP மற்றும் தேர்ந்தெடுக்க பட்ட எவரும், மக்களுக்கு "கடமை" செய்வதற்காகத்தான் தேர்ந்தெடுக்க படுகிறார்கள். தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை, எத்தனை காலம் 'எங்கள் சாதனை' என்று மக்களை ஏமாற்றி வருவீர்கள். சாதனை என்று சொல்லாதீர்கள். கடமை என்பதுதான் உண்மை. அதற்காகத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க பட்டார்கள்...ஒவ்வொரு மாதமும் அதற்கான ஊதியம் பெறுகிறார்கள். ஒன்னும் ஓசியில் வேலை செய்ய வில்லை.
ஒருவேளை காலாகாலமாக தீர்த்து விட முடியாமல் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தால் அதனை சாதனை என்று சொல்லலாம். இவ்வளவு வாய் கிழிய பேசும் இவர்கள் நாசக்கார DCW விற்கு சாவு மணி அடித்து இருந்தால் அல்லது குறைந்தா பட்சம் முயற்சியாவது செய்து இருந்தால் சாதனை என்று சொல்லலாம். ஊரில் கேன்சர் என்று கொடிய நோய் பரவி கிடக்கிறதே. அதனை ஒழிக்க என்ன முயற்சி செய்தீர்கள். எங்கே காசு புழங்கு கிறதோ (அது எழவு வீடா இருந்தாலும்) அங்கேதானே நம்ப அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். எப்ப பாரு ரோடு போட்டோம், டிவி குடுத்தோம்னு தம்பட்டம் அடித்து கிட்டு.
ஐயே...எத்தனை முறைதான் காயல்பட்டினம் - கலைகர்பட்டினம் என்று கூவி கிட்டே இருப்பிங்க. ஒரு பயலும் கேட்க்க மாட்டேன்குறான். எத்தனை முறை திரும்ப திரும்ப உரைத்தாலும், காயல்பட்டினம் என்றும் காயல்பட்டினமே!! அதில் தான் ஊருக்கும் பெருமை...எங்களுக்கும் பெருமை. உங்கள் அரசியல் பொழப்பை மட்டும் பார்த்து கிட்டு போங்களேன்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross