Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byTariq (Jeddah)[15 December 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14616
முதலில் தாயிம்பள்ளி ஜமாஅத் நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இத்தனை காலமாக நமது மனதில் இருந்த மனக்குமுறல்களை நாளு பேருக்கு உரக்க சொல்லி வெளிபடுதியதற்கு.....
இவர்கள் சொல்லுவது போல் ஒரு வழி பாதை நடை முறை படுத்துவதால் ஒரு பாதிப்பும் வராது. இந்த Ktm தெருவில் வாழ்ந்த எங்கள் மூதயர்கள், வாழும் பெரியவர்கள், மற்றும் நாங்கள் எங்கள் பிள்ளைகள் அனைவரும் அல்ஹம்து லில்லாஹ் நன்றாக இருக்கிறோம்....
புதியதில் கொஞ்சம் சிரமமாக இருக்கும் போக போக சரி ஆகி விடும்..எங்கள் தெரு பிள்ளைகள் இந்த அதிரும் பஸ் horn சத்தத்தில் தான் தூங்கவில்லையா இல்ல இதே தெருவில் விளையாடிய பிள்ளைகள் தான் விளையாட்டில் ஜொலிக்க வில்லையா? பொது நலம் கருதி இந்த சுமைகளை நாங்கள் இத்தனை தலைமுறை தாங்கியது போல் பெருகிவரும் வாகன நெரிசலை குறைக்க நெசவு தெரு நண்பர்கள் முன் வர வேண்டும்.
எங்கள் தெருவில் நாங்கள் இழந்த உரிமைகள் சம்பந்த பட்டவர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
எத்தனை பேர் வீட்டுக்கோட்டை மற்றும் படிகளை இழந்தது போக இன்னும் அகலபடுத்தி வீட்டையும் இழக்க வேண்டுமா?
இதனை படிக்கும் மாற்று தெரு அன்பர்கள் கூட படித்தது மட்டுமில்லாமல் உங்கள் நடு நிலையான கருத்துகளை பகிர்த்து கொண்டால் சம்பந்த பட்டவர்களுக்கு தெளிவு கிடைக்கும்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross