வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள் posted bySalai Sheikh Saleem (Dubai)[15 December 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14617
அன்பு தம்பி வக்கீல் அஹ்மத் அவர்களுக்கு விருதுகிடைத்தமைக்கு ஒட்டுமொத்த காயலர்களின் சார்பில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
நமதூரில் மாற்றுதிறனாளிகளின் (நன்றி கலைஞர்) மனம் படும் பாட்டை நன்கு அறிந்து அவர்களுக்கு என்று ஒரு காப்பகம் ஆரம்பித்து, வீட்டில் மூலை முடுக்குகளில் முடங்கிக்கிடக்கும் பிள்ளைகளின் இதயத்தில் நம்பிக்கை ஒளியை வளரசெய்துகொண்டிருக்கும் துளிர் - நமதூருக்கே ஒரு வரப்பிரசாதம்.
இதை நம்மவர்கள் சரிவர பயன்படுத்துவது இல்லை என்கிற மனக்குறை இன்று வரை இருந்து வருகிறது.
பெற்றோர்களே இப்படிப்பட்ட மாற்றுதிறனாளிகள் உங்களின் வீட்டில் இருந்தால் தயவுசெய்து உங்களின் குடும்ப கௌரவம், இது வெளியில் தெரிந்தால் உங்களின் மற்ற பிள்ளைகளுக்கு நல்ல சம்பந்தம் கிடைக்காது என்று எண்ணி அந்த இறைவனின் குழந்தைகளை வீட்டின் இருட்டு அறைகளில் பூட்டி வைத்து கொலை செய்துவிடாதீர்கள். ஒரு வேளை உங்களின் குழந்தைகள் துளிரில் சேர்ந்து அவர்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டால் நாடு போற்றும் சாதனைகள் கூட செய்யலாமே. சிந்தியுங்கள் செயல்படுங்கள். அல்லாஹ் போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross