சேவை தொடர வாழ்த்துக்கள். posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[15 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14619
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
விருது பெற்ற சகோதரர் ஹெச்.எம்.அஹ்மது அவர்களுக்கு பாராட்டுக்கள் - தங்களது, பிரதிபலன் பாராத சேவை தொடர வாழ்த்துக்கள்.
சேவை, சேவை பொதுச் சேவை என்று நம்மில் பலரும் இன்று பல சேவைகளை செய்கிறோம் ஆனால் துளிர் போன்ற மாற்றுத்திறனாளிகள், இயலாநிலைக் குழந்தைகள் உள்ள இடங்களில் சேவை செய்வதே உண்மையான சேவையாகும்.
இறைவனின் நற்கூலியை மறுமையில் பெறுவது ஒன்றையே மனதில் கொண்டு தாங்கள் சேவையாற்றுவதால் - நிச்சயமாக வல்ல அல்லாஹ்! தங்கள் வாழ்வை இம்மையிலும் , மறுமையிலும் சிறப்பாக்கி வைப்பான்.
துளிர் நிறுவனத்துக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்வதுடன், அதில் உள்ள குழந்தைகளின் நலனுக்காகவும், அதில் சேவை புரிகிற அனைத்து மக்களின் நல் வாழ்வுக்காகவும் வல்லோன் இறைவனிடம் பிரார்த்திப்போமாக ஆமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! உடல் ஊனமில்லாக் குழந்தைகளை, மன வளர்ச்சி குன்றாத குழந்தைகளை தந்து - இது போன்ற காப்பகங்கள் பெருகாவண்ணம் கிருபை செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross