மருத்துவம் பார்ப்பதில்லை அந்த நோய் முற்றி விபரீதமாகும் வரை. posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[19 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14894
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த மருத்துவ ஆலோசனை இலவச முகாம் சிறப்பாக நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!.
முகாம் தொடங்கும் முன்பே மக்கள் வந்திருந்தது அவர்களின் ஆர்வத்தை பிரதிபலித்தது.
------------------------------------
பல வகைப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் வந்து ஆலோசனையும், சிகிச்சையும் அளித்தது மக்களுக்கு மிகுந்த பயனை தந்தது.
இது போன்று மருத்துவ முகாம் நடத்துவதால் சோம்பலான மக்களும் , அஜாக்கிரதையான மக்களும் விரும்பியோ, விரும்பாமலோ மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சைப் பெற்று பெரும் பயனடைகின்றனர் அல்ஹம்துலில்லாஹ்!.
இந்த மாதிரி மருத்துவ முகாம்கள் நடைபெறவில்லை என்றால் சில மக்கள் உண்மையாகவே மருத்துவம் பார்ப்பதில்லை அந்த நோய் முற்றி விபரீதமாகும் வரை.
அதனால் மக்களின் சேவைக்காக இது போன்று பல மருத்துவ ஆலோசனை முகாம்களை நடத்துவது மிகவும் சிறந்த செயல்.
-------------------------------------
மக்களின் மனோ நிலையை புரிந்து அவர்களுக்கு சேவையாற்றிய கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த " கோமான் நற்பணி மன்ற " சகோதரர்களுக்கு நன்றிகளும், நல் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
இந்த முகாமுக்கு தலைமை தாங்கி சிறப்புடன் மருத்துவ முகாம் நடைபெற்று பல நூறு மக்கள் பயன்பெறும்படி சேவையாற்றிய சகோதரர் லுக்மான் அவர்களுக்கும் மற்றும் அதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! ஈருலகிலும் நல் வாழ்வை கொடுப்பானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross