செய்தி: முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
துளிர்விடும் சமுதாயம் எதிர்பார்ப்பு posted byMauroof, S/o. Mackie Noohuthambi (Dubai)[29 December 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15222
இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாக்கவும் இழக்கப்பட்ட உரிமைகளை மீட்கவும் என்ற உயரிய இலட்சியங்களோடு துவக்கப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளுக்கு நல்லதோர் பரிகாரம் கண்டு ஓர் தலைமையின் கீழ் வரவேண்டும் என்பதே ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கனவாக இருக்கிறது என்றால் மிகை ஆகாது.
இந்திய இஸ்லாமிய கட்சிகளின் "தாய்" என்று போற்றப்படும் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"கின் தமிழக மாநில பொதுச்செயலாளரும், 1995 - ஆம் ஆண்டு மிகுந்த எழுச்சியுடனும் பொதுமக்களின் (இளைஞர்களின்) பேராதறவோடும் துவங்கப்பெற்ற "தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக(ம்)"த்தின் மாநில துணைப்பொதுச்செயலாளரும் சந்தித்து சில கருத்துப் பரிமாற்றங்கள் செய்திருப்பது சமுதாயத்தின் ஒற்றுமையை பெரிதும் எதிர்பார்க்கும் என் போன்றோரின் கண்களில் குளிர்ச்சியை தந்திருக்கிறது.
தொடரட்டும் இது போன்ற சந்திப்புகள். எல்லா இஸ்லாமிய இயக்கங்களிடமும். ஒரு "தாய்" என்ற முறையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" தன்னிடம் கண்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து சென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு சிறு குறு இயக்கங்களாக பரவி செயலாற்றி வரும் தன் பிள்ளைகளிடம் பாசக்கரமும் நேசக்கரமும் நீட்டி சந்தித்து கருத்து வேறுபாடுகளை களைந்து அவர்களை ஒரு தலைமையின் கீழ் ஜனநாயக முறையில் சமுதாயத்தின் வலிமைக்காக ஒன்று சேர்க்க வேண்டும்.
இதற்கு இக்காயல்பதியில் இவ்விரு எழுச்சிமிகு இளம் தலைவர்களுடைய சந்திப்பு ஒரு முன்னுதரணமாக அமைந்தது என்று மிக அருகாமையிலான வருங்காலம் பறைசாற்றும் என்ற நம்பிக்கையோடு என் போன்றோர் இச்சந்திப்பை நோக்குகிறோம்.
நாம் ஒன்றுபடவேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்பினால் அதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் அகற்ற படைத்தவன் பொறுப்பேற்பான் என்பதில் என்ன சந்தேகம்? இன்ஷா அல்லாஹ் இது செயல் வடிவம் பெறட்டும் என வாழ்த்துகிறேன். இச்செய்தி தொடர்பான கருத்துப்பதிவில் சொல்லப்பட்டிருக்கும் வசனம் சூரா - ஆல இம்ரான், வசனம் - 134.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross