ஆணவத்தினாலும் ஆத்திரத்தினாலும் ஆரோக்கியமற்ற மனப்போக்கினாலும் என்ன எழுதுகின்றோம் என்று உணராமலும்,
ஊர் மக்களுக்குள் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தெருவில் இறங்கி போராட கொம்பு சீவிவிட்டு அதில் குளிர்காய நினைப்பதும்,
ஒரே தெரு வாசிகளுக்கு மத்தியிலே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக ஒருவருகொருவரை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைப்பதும்,
ஒரு ஜமாத்தையே கண்ணியக்குறைவாக எழுதுவதும்,
ஆற அமர அமர்ந்து சகோதர உணர்வுடன் யோசித்தால் வழி பிறக்கும் என்று பலரும் கோரிக்கை விடும் பொழுது இந்த பிரச்சினைக்கு தீர்வு வந்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் (?) சம்பந்தப்பட்ட ஜமாத்தை சார்ந்தவர்கள் படித்தால் ஆத்திரப்பட்டு பிரச்சினை பெரிதாக வேண்டும் என்று சிலர் வக்கிரத்தனமாக பொழுது போகாமல் எழுதுவதும்,
அம்மாதிர்யான கருத்துக்களை எந்த வித மாடரேஷனும் இல்லாமல் இந்த இனைய தளத்திலே வெளியிடப்படுவதும்,
நெசவு ஜமாஅத்துடைய நியாயமான கருத்துக்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் அதை பரிசீலனை செய்யக்கூட செய்யாமல் அதன் சாதக பாதகங்களை ஆராயாமலும்,
ஆய்வுக்கு வந்த காவல் துறையினராலேயே பரிந்துரைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினால் கிடைக்கும் தீர்வை, ஆக்கிரமிப்புக்களுக்கு துணை போகும் விதமாக பரிசீலனைக்கு எடுத்துகொல்லாமலிருப்பதும்,
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே பேரூராட்சி நிர்வாக அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்டதென்று சொல்லப்படும் மாற்று வழிகளையும் உதாசீனப்படுத்தியும்,
எங்களது என்னத்தை நிறைவேற்றியே திருவோம என கங்கணம் கட்டி கொண்டு கருத்துக்களை பதிவு செய்வதும்,
இந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வு கிடைப்பதற்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை.
இந்த இணைய தளத்தை மட்டுமே வாசிக்கும் சகோ. சீனா "நமதூருக்கு வருகைபுரிந்த டி.எஸ்.பி. திரு.ஞான சேஹரன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் திரு.சேகர், ஆறுமுகநேரி காவல் ஆய்வாலர் திரு.பார்த்திபன், ஆர்.டி.ஓ. S.I திரு.K.சந்திர சேகர், காயல்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி திரு.செல்வலிங்கம், காயல்பட்டணம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணையா, நகராட்சி பொறியாளர் திரு.செல்வமணி, சர்வேயர் திரு.கந்தப்பன் ஆகியோர்கள்".. "கே.டி.எம்.தெருவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமிப்பு என்று கூறிய அதிகாரிகள் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்." என்று நமதூரின் மற்றொரு வலைதளத்தில் வந்த செய்தியை படிக்கவில்லை போலும். அந்த செய்தியை இந்த வலை தளத்தில் பதிவு செய்த சகோதரர் அச்செய்தியை அதிகாரிகள் சொன்னபோது எங்கு சென்று விட்டார் என அவரைத்தான் கேட்க வேண்டும்.
ஏற்கனவே பேருந்து செல்லும் வழித்தடத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை; அவர்களின் தியாகத்தை நாம் குறைவாக மதிப்பிடவும் இல்லை,
அதிகார்களின் பரிந்துரைப்படி ஆக்கிரமிப்புகள் என்று சொல்லப்படுபவை சீர் செய்யப்பட்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடாதா என்ற எண்ணம் தான் சில ஆலோசனைகளில் வெளிப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தின் மீது நமக்கு மிக நன்றாகவே உயர்ந்த மதிப்புள்ளது, ஒரு வலைதளம் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று பல வலைதளங்கள் காயல் பெயரை சுமர்ந்துள்ள நிலையில் வாசகர் எண்ணிக்கை கூட்டுவதற்கு இது போன்ற சென்சிடிவான பிரச்சினைகளுக்கு வாசகர் கருத்துக்கள் என்ற பெயரில் பொழுது போகாத சிலர் வலைதளத்திலே வாந்தி எடுப்பதை அனுமதிப்பது ஊர் நலனுக்கு உகந்தது அல்ல என்பது நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
பலரும் நெசவு ஜமாத்திடம் கோரிக்கை வைத்திருகிறீர்கள். நெசவு ஜமாஅத்தினரும் அவர்களது கோரிக்கையை வைத்திருகிறார்கள்,
நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் கோரிக்கை வைப்போம்.
யா அல்லாஹ! எந்த தீர்வினை நன்மை என்று நீ கருதுகின்றாயோ அந்த தீர்வின் மூலம் எங்களுடைய இந்த பிரச்சினைக்கு நல்லதொரு முடிவை தருவாயாக .- ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross