Re:தல கால் புரியல... (?!)... posted byRayyan's Dad!! (USA)[30 December 2011] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 15260
தல கால் விஷயத்துலே கமன்ட் எழுதுறதுக்கு என்ன இருக்க போதுன்னு யோசிக்கிறதுக்குள்ள, அடேங்கப்பா! எத்தனை கமெண்ட்ஸ் இங்கே. ஒருத்தர் என்னா னா 'கலரி சோறு ஒரு பிடி பிடிச்சாச்சி...' னு சொல்லுறார். இன்னொருவர் 'குடல் பூவை வறட்டி கொரிக்கிறவங்களுக்கு மட்டுமே தெரியும் அதன் அருமையும் பெருமையும்' னு சொல்லுறார். என்னாமா ரசிச்சு எழுதி, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற எங்களை... ஏன் இப்படி உசுப்பி விடுறீங்க!! நீங்க எழுதுறதை பார்த்தா நாளைக்கே மூட்டையை கட்டிட்டு கிளம்பிவிடலாம் போல இருக்கு.
போன தடவை ஊர் வந்தப்ப ஒரு கல்யாணமும் இல்லைங்கோ... மாப்பிள்ளைமார்கள் எதுவும் ஸ்ட்ரைக் பண்ணிட்டாங்களோ என்னவோ. ஒரு கலரி சோறு வாயிலே படாம போச்சு.
அமெரிக்காவிலும் ஒரு சில கடைகளில் (அதான் நம்ப இந்தியா பாகிஸ்தானி அதிகமாக வசிக்கும் இடங்களில்) இந்த குடல் விற்பனை செய்வது உண்டு. உள்ளே இருக்கிற அத்தனை குடலையும் கீழே போட்டுருவானுங்க. வெளியே இருக்கிற பெரிய குடல் மட்டும் வெள்ளை வெளேர்னு நம்ப வெள்ளைகாரன்
மாதிரி இருக்கும். இவனுக எதை வைச்சு கழுவுவானு வோன்னு தெரியலை. ஒரு வேலை கெமிக்கல்ஸ் யூஸ் பன்னுவானுவளோ என்னவோ தெரியலே. சோப்பு போட்டு கழுவிய மாதிரி லைட்டா வாடை அடிக்கும்.
டேஸ்டே இருக்காது. தலை... காலும் இதே மாதிரி தான். வக்குற கான்செப்ட்லாம் கிடையாது. மேலே உள்ள ஸ்கின்னை அப்படியே உரிச்சி எடுத்து வெறும் எலும்ப்போட கொடுப்பானுகோ. இந்த தலை, குடல், கால் லாம் மறந்து பல வருடங்கள் ஆயிருச்சு. ஊருக்கு வந்தா தான் இந்த உணவுகள்.
இந்த அமெரிக்காவில் எத்தனையோ நாட்டு உணவுகளை ஒரு கைபார்த்து இருந்தாலும், நமதூரின் கலரி (கலோரீஸ் பார்த்து சாப்பிடுங்க!!) சாப்பாடும் இந்த குடல் தலை சமாச்சாரங்கள்... தனி ருசிதான்.
எதையும் அளவுடனும், அதுவும் குறிப்பாக நமது ஆரோக்கியத்துக்கு ஏற்றாப்போல் சாப்பிட்டு கண்ட்ரோலில் இருக்கும் வரை!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross