Re:திருக்குர்ஆன் விரிவுரையாள... posted byT,M,RAHMATHHULLAH-04639.280852 (KAYALPATNAM 04639 280852)[01 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15346
இன்று 1-1-2012 ஞாயிறு 6 ஸபர 1433புது வருஷத திலேயே சொர்க்கம் புகும் பேச்சாற்றல் எழுத்தாற்றல் மிக்க ஒரு உன்னதமான இறைவிசுவாசி. அவர்கள் மறைந்துவிட்டாலும் அவர்கள் எழுதிய நூல்கள், அவர்கள் பேசிய பேச்சுக்களின் கம்ப்யூட்டர் ஒலிப்பதிவுகள் செய்து அவற்றை நமது அலைபேசிகளில், மடிக்கணினிகளில் ஓடவிட்டு கேட்கும் போதும் பார்க்கும்போதும் நம்மிடையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிலைத்திருப்பவர்கள் மிக சிலரே. அந்த வரிசையில் ஆலிம் அவர்கள் பெரிய வெற்றிடத்தை இந்த சமுதாயத்துக்கு விட்டு விட்டு மறைந்திருக்கிறார்கள்
." WA FAWQA KULLA ZEE ILMIN AZHEEM " எனும மறை வாக்கியத்திபடி அல்லாஹ் நமக்கு மற்றொரு எத்தனையோ மகான் களை தருவானாக!
மவலான நிஜாமுத் தீன் மன்பஈ அவர்களது மறைவு உலகுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். இறைமறையை இனிய தமிழில் அற்பணித்த கண்ணியமிகு மேதை. தோற்றத்தில் எளிமை, பேச்சினில் நசூக்கான நகைச்சுவை நளினம், பழகுவதில் மென்மை , ஒழுக்கமான, நேர்மையான பொது வாழ்வு, இதுதான் நிஜாமுத்தீன் ஹஜ்ரத். ..... உதாரனத்துக்கு ஒன்று, 1906 ல் சென்னை மத்ரஸா யே நிஸ்வான், பொன்விழாவில் ஒரு பயானில்.. இக்கால பெண்களின் அரை குறை பர்தாவைப் பற்றி கண்டித்து கூறும்போது ஒரு நகைச்சுவை
” அணண்லும் நோக்கினார்- அவளும் நோக்கினார்” என்ற ஒரு காதல் இலக்கிய வாக்கியம் உண்டு. அதனை சொல்லி விவரித்து விட்டு “அண்ணன் கையிலும் நோக்கியா இவள் கையிலும் நோக்கியா ”என்று நகைச்சுவை நயத்தோடு இக்கால வாலிபர்களும் வாலிபி களும் தவறான முறையில் Nokia செல் உரையாடி வாழ்க்கையை பழாக்கும் கலாச்சாரத்தை கண்டித்தார்கள். நிற்க, ஒரு முறை எனது வேண்டுகோளின் படி தஃலீம் கிதபுகளில் கையாளப்படும் பல,பல கடின தமிழ் வார்த்தைகளை குறிப்பாக இலங்கை மக்களுக்காகவே இலகுவாக மாற்றி அமைக்க உதவினார்கள் . இதற்கு தனிப்பட்ட முறையிலும் நான் நன்றி கூறினேன்
திருமறை மொழியாக்கத்தில் அவர்களோடு சேர்ந்து பணியாற்றிய எனது பெருமதிப்பிற்குரிய முற்ஷித் அவர்கள் ஷைகுல் தர்ஜுமா மவ்லானா அப்துல் வஹ்ஹாப் M.A.B.Th , ஆகிய அறிஞர்களோடு உறவாடும் பாக்கியம் கிட்டிய எனக்கு, ஹஜ்ரத் அவர்களது மறைவு பேரிழப்பாகும்.
أسأل الله أن يغفر ذنوبه كلها.. جعل مشرق قبره... إعطاء الجنة في يوم القيامة
آمين
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross