என்னைப் பற்றி... posted bySKS (Daruttibyan Network) (Kayalpatnam)[02 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15379
சகோ. ஜாஃபர் ஸாதிக் காக்கா (ஜித்தா) அவர்களே!
மாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்தது வெள்ளிக்கிழமை. காலை 10 மணிக்கு வருவார் என தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளைச் சார்ந்த அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஆட்சியர் வர தாமதமாகிக்கொண்டே சென்று, நிறைவில் ஜும்ஆ நேரமும் வந்தது. எனவே, காத்திருந்த பலர் ஜும்ஆ தொழுகைக்காக இரண்டு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர்.
அந்நேரத்தில், “நாம் ஜும்ஆவையும் இழந்துவிடக்கூடாது... அதே நேரத்தில் இந்த முக்கிய நிகழ்வையும் பதிவு செய்தாக வேண்டுமே...” என்று நான் கவலைப்பட்டது போலவே, அங்கு காத்திருந்த சில பகுதிகளைச் சார்ந்த மக்களும் கவலைப்பட்டனர்.
இறுதியில், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் சற்று தாமதமாகத்தான் ஜும்ஆ தொழுகை நடைபெறுகிறது என்ற தகவலறிந்து, அதில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தோம். சில மணித்துளிகளில் ஆட்சியரும் வந்தார். சிலர் அவரவர் கோரிக்கைகளை அளித்தனர். என் கடமைக்கு நான் செய்தி சேகரிப்பில் முழு கவனத்துடன் ஈடுபட்டேன். இதுதான் நடப்பு!
நான் இக்கருத்தில் சொல்ல வருவது என்னவெனில், தாங்கள் உட்பட பலர் என்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என் தகுதிக்கு மிஞ்சியதாகவே உள்ளது என்பதுதான். ஓரிடத்தில் ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால், (எனக்கு தனிப்பட்ட முறையில் அதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் - இல்லாவிட்டாலும்) அந்நிகழ்வை அப்படியே பதிவாக்கி, உள்ளது உள்ளபடி செய்தியாகத் தருவது மட்டுமே எனது பணி என்பதை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
என் மனக்குறைக்குக் காரணம்... இந்த ஒருவழிப்பாதை செய்திகளில் கூட சில அன்பர்கள், நான் கே.டி.எம். தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால், நெசவுத் தெரு மக்கள் சந்தேகப்படுவதும், நெசவுத் தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால் கே.டி.எம். தெரு மக்கள் சந்தேகப்படுவதும் அந்தந்த செய்திகளின் கருத்துப் பகுதியிலேயே தெரிகிறது.
என்னைப் பொருத்த வரை நான் ஒரு செய்தியாளன்... எனக்கென பொதுவாழ்விலோ, ஜமாஅத் ரீதியிலோ, தனிப்பட்ட முறையிலோ, மார்க்க அடிப்படையிலோ சில கருத்துக்கள் இருப்பினும், நான் செய்து வரும் செய்திப்பணியில் அக்கருத்துக்கள் அணுவளவும் பிரதிபலிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறேன்.
அவ்வாறிருக்க, செய்தியாளராக நான் சென்ற இடங்களிலெல்லாம் எனக்கு சரியெனப்பட்ட கருத்தை வலியுறுத்தத் துவங்கினால், பின்னர் என் செய்தியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்ற அடிப்படையிலேயே நான் மவுனம் காத்து வருகிறேன்.
இத்தனையையும் தாண்டி, உங்களில் சிலருக்கு என் விஷயத்தில் தெளிவு கிடைக்கவில்லையெனில், எனது கைபேசி எண்ணுக்கு (+91 98658 19541) தொடர்புகொண்டு கேட்டறிய அன்புடன் வேண்டுகிறேன்.
செய்திப்பணியைப் பொருத்த வரை விமர்சனங்களை நாம் ஏற்கப் பழகித்தான் ஆக வேண்டும் என்பதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நன்கறிவேன் என்பதால்தான் இதுநாள் வரை இதுகுறித்து எந்தக் கருத்தும் என் பெயரில் தெரிவிக்காமலிருந்தேன். ஆனால் ஜாஃபர் ஸாதிக் காக்கா அவர்கள் தற்போது என் பெயரைக் குறிப்பிட்டே கேட்டுவிட்ட காரணத்தால்தான் இந்த விளக்கம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.
அல்லாஹ் நம் யாவருக்கும் உளத்தூய்மையையும், நிறைவான நகர்நல சிந்தனைகளையும் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross