செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை பயனாளிகள் சங்க கோ... posted bymackie noohuthambi (kayalpatnam)[04 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 15474
கடற்கரைகள் காற்றுவாங்குவதற்கு மட்டுமின்றி தம்பதிகள், இளைஞர்கள், முதியவர்கள் அவரவர்களின் பருவகால உணர்வுகளை பகிர்ந்து கொள்ள மக்கள் தேர்ந்தேடுதுள்ள ஒரு தனிமையில் சுகம் காணும் இடம்.
நமதூர் மக்கள் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இரண்டு வருடங்களை அங்கு கழித்து விட்டு இங்கு ஓய்வெடுக்கும் காலங்களை இப்படி வந்து தங்கள் இளமை உணர்வுகளை புதுப்பித்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நோக்கங்களுக்கு மாற்றமாக பாலியல் விபரீதங்கள், ஓரினச்சேர்க்கை, மன்மத லீலைகள் அங்கு நடைபெற ஆரம்பித்து விட்டதால் அதனை கட்டுப்படுத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளது.
உணர்வுகளின் எல்லை மீறல்கள் என்பதால் இதை மார்க்க ரீதியாகத்தான் அணுக வேண்டும். ஷரியத் சட்டங்களை நமது பெண்களுக்கு மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். ஜலாலியா, பெண்கள் மதரசாக்கள், மார்க்க சொற்பொழிவுகள் நடக்கும் இடங்களில் இதன் தாக்கத்தை உலமாக்கள் எடுத்து சொல்லவேண்டும். கருத்தரங்குகள், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இதற்கு மேலும் கடற்கரையை அழகுபடுத்த நினைக்காமல் பெண்கள் தொழுக இடம் ஆண்கள் தொழுக இடம், நவீன கழிப்பிடங்கள் போன்றவை அமைத்து கடற்கரையை உண்மையான நிம்மதி தரும் இடமாக மாற்றலாம்.
இரவு பத்து மணிக்குமேல் யாரும் கடற்கரையில் இருக்கக்கூடாது என்று சட்டம்போடலாம். காவல் துறையினர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். தொலைக்காட்சிகளும் செல்போன்களும் விதவிதமாக பல முன்னேற்றங்களை அறிமுகபடுத்தும்போது அந்த வலையில் விழாமல் தப்பித்துக்கொள்ள என்னதான் வழியிருக்கிறது?
அல்லாஹ் நம் பெண்களின் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவானாக. ஆமீன். மக்கி நூஹுதம்பி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross