செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை பயனாளிகள் சங்க கோ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[04 January 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15475
இந்த கடற்கரை மேட்டருக்கு கமெண்ட்ஸ் எழுதி எழுதியே ஓய்ந்து விட்டாச்சு. பலனோ, அதற்க்கு உண்டான முயற்சியோ இதுவரை கிடையாது.
ஆனால் இந்த நிகழ்வை பார்த்தால், ஒரு விடிவு காலம் வரும் போல தெரிகின்றது. இன்ஷாஹ் அல்லாஹ். ஏன் என்றால் ஊரின் நலன் மீது அதிக அக்கறை கொண்ட பல நல்லவர்கள் கூடவே இருக்கின்றார்கள்.
தாங்கள் கூறிய படி, முதலில் குப்பை தொட்டிகளை அதிகமாக நிறுவுங்கள் கூடவே அதை பராமரிக்கவும் செய்யுங்கள். நாம் அமர்ந்து இருக்கும் இடத்தில கிடக்கும் குப்பைகள், ஐஸ் குச்சிகள், பேப்பர்கள் ஆகியவற்றை நாமே அகற்றினால், சுத்தம் நிச்சயம்.
* நம் ஊர் பள்ளிகள் மற்றும் கல்லூரியில் N.S.S. என்று ஒன்று இருக்கின்றது. தேசத்திற்கு சேவை செய்யனும் என்ற குறிக்கோளுடன்!! இதுவரை நம் ஊருக்கு அவர்கள் செய்த சேவை என்ன என்று நான் அறியேன்.(ஒரு வேலை அவர்கள் விளம்பரம் இல்லாமல் சேவைகள் செய்துகொண்டு இருக்கலாம்!! ). அவர்கள் அனைவர்களையும் ஒருங்கினைத்து, அவர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டால், ஒரு மணி நேரத்தில் மொத்த கடற்கரையும் கிளீன்..
* கடல்மணல் பரப்பில் எந்த வியாபாரமும் கூடாது.
* அதி முக்கியம் பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள் வேண்டும்.
* பெண்கள் தொழுவதற்கு வசதி தேவை.
சகோதரர் A.M.செய்யத் அஹ்மத் ( comments No. 15454 ),
கூறியுள்ள drug (போதை விசயம்), உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் இருக்கின்றதே. இதில் அதிகம் அக்கறை காட்டுங்களேன். காவல் துறையில் பிடித்து கொடுத்து, வைச்சு நல்ல சுளுக்கு எடுக்கனும்.. ங்ங்ங்..கொய்யாலே... (அட்மின் அவர்களே இந்த வார்த்தையை கட் பண்ணிவிடாதீர்கள்... இதுவரை "கொய்யாலே" விற்கு அர்த்தம் கண்டுபிடிக்க வில்லையாம்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross