Re:ஒருவழிப்பாதையை அவசியம் நட... posted byS.A.MUHAMMAD ALI (Dubai)[04 January 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15476
சின்ன நெசவு தெரு என்பது நெசவு தெருவிற்கு மட்டும் சொந்தமான தெரு கிடையாது. தாயிம்பள்ளி ஜமாஅத் மற்றும் பிற ஜமாஅத்தை சேர்ந்த மக்களும் உங்களுக்கு இணையாக இருக்கிறார்கள்.
அவர்கள் யாரும் கூப்பாடு போடவில்லை. சின்ன நெசவு தெருவின் அகலத்திற்கு மூன்று வழி பாதையே போடலாம். அங்கு யாரும் வாகன நெரிசல் உள்ளது என்று குறை கூறவில்லை.
KTM தெரு வாசிகள் செய்தது தியாகம் மற்றவர்கள் செய்தது துரோகம் என்று பெருமை அடிக்க கூடிய விஷயம் இல்லை.
பெருகும் வாகன போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் இருக்கும் வழிகளில் சிறந்த வழியாக நெசவு தெரு, கூல கடை பஜார் வழி தான் என அனைத்து மக்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
வரும் காலத்தில் ஒரு வழி பாதை வராவிட்டாலும் பிள்ளைகள் தெருவில் வந்து விளையாட முடியாது. இப்பொழுது வீட்டுக்கு வீடு பைக், கார் வந்து விட்டது. எந்த நேரத்திலும் கவன குறைவாக இருந்தால் விபத்து ஏற்படலாம். எங்கள் தெரு பிள்ளைகள் ஒன்றும் விளையாட்டிலும் படிப்பிலும் குறைந்து போய் விடவில்லை.
உங்கள் தெரு கல்யாணத்தை உங்கள் பள்ளிவாசல் அருகே போக்குவரத்து இல்லாத இடத்தில அமைத்து கொள்ளலாம். நிரந்தர மேடை போட்டு கல்யாண செலவை கூட குறைக்கலாம்.
தற்போது கூட உங்கள் தெரு பிள்ளைகள் தாயிம்பள்ளி சங்கத்தில் எங்கள் தெரு பிள்ளைகளோடு விளையாடுவதை காண்கிறேன். அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
உங்களை யாரும் துரோகிகள் என்று கூறவில்லை. அண்ணன் தம்பிக்குள் சண்டை வந்தால் கோபத்தில் சில வார்த்தைகள் வரதான் செய்யும். அதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு பேசி கொண்டு இருக்க கூடாது.
விபத்து என்பது எங்கள் தெருவிலும் நடதுள்ளது நைனார் தெருவிலும் நடந்துள்ளது. அது நம்முடைய கவன குறைவாலும் ஏற்படும்.
வேண்டாம் என்பதற்கு சில காரணம் கூறும் உங்களுக்கு வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் எங்களாலும் கூற இயலும்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு வழி பாதை வரும். நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross