Re:புனித மக்கா காயல் தன்னார்... posted byஅமீர் சுல்தான் (கிழக்கு மாகாணம், சவுதி அரேபியா)[06 January 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15622
அல்லாஹ்வின் விருந்தாளிகளை வரவேற்பதற்கு, வழிகாட்டுவதற்கு மற்றும் உதவிகள் செய்வதற்கு முன்வந்திருக்கும் ஜித்தா காயல் நல மன்றத்திற்கு வாழ்த்துகள் பல.
இந்திய மக்களின் தன்னார்வ தொண்டு அமைப்பான இந்திய ப்ரட்டர்னிட்டி பாரம் (IFF) கடந்த 6 (அ) 7 வருடங்களாக ஹஜ் பயணிகளுக்கு சேவைகளை செய்துவருகின்றது.அதில் காயல் மக்கள் பலரும் தொண்டாற்றி வருகின்றனர். அவர்களின் ஆலோசனைகளையும் பெறலாம்.
1.ஹஜ்ஜிற்கு வரும்முன்பே அவர்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.உதாரணத்திற்கு - நடைபயிற்சி மேற்கொள்ளுதல். உணவு முறைகள்.
2.கூடாரம் பற்றிய வரைபடத்தினை அவர்களுக்கு விளக்குதல்.
௩. எந்நேரமும் அணிந்திருக்க வேண்டிய விபரம் பதிந்த கைப்பட்டைகள். (குளிக்கவோ, கழிப்பிடம் செல்வோர் கழட்டடி வைத்துவிட்டு பின்னர் மறந்து விடுகின்றனர்).
3.நெரிசல் மிகுந்த பகுதிகளில் குறைந்த அளவிலான பொருட்களையும் பணத்தை கொண்டு செல்ல அறிவுரை வழங்குதல்.
4.ஹாஜிகள் வழமையாக உட்கொள்ளும் மருந்துகளை அங்கிருந்தே கொண்டுவர அறிவுரை வழங்குதல் அந்த மருந்து சீட்டுகளையும் மெடிக்கல் ரிப்போர்ட்களையும் கொண்டுவரச் செய்தல்.
5.நோய்கள் பரவுவது உணவுகள் மூலம்தான் எனவே மூடப்படாத சுகாதரமற்ற உணவுகளை தவிர்க்கச் சொல்லுதல்.
6.மக்கா,மதீனா மற்றும் கூடாரங்களில் வழிதவறிவிட்டால் பதற்றமடையாமல் இருக்க அறிவுரை வழங்குதல்.
7. தங்களின் தன்னார்வக்குழுக்கான (help desk) அலைபேசி எண்ணை அனைவரிடமும் கொடுத்தல்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross