செய்தி: அனைத்தையும் மறந்து, இணைந்து செயலாற்றி, ஊரை முன்னேற்ற வேண்டும்! முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அனைத்தையும் மறந்து, இணைந்... posted byஅப்துல்காதர்-ஜுபைல் (saudi arabia)[06 January 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15649
மாஷா அல்லாஹ் தொடரட்டும் உங்கள் மக்கள் நல அரசியல்....
முஸ்லிம் லீக் ஒரு காலத்தில் முஸ்லிம் மக்களுக்காக பல சேவைகளை பாராட்டதக்க செய்துவந்தது உண்மைதான்.
ஆனால் இன்றோ அது ஒரு கட்சியின் சிறுபான்மை பிரிவாகவே மாறி அந்த கட்சி எந்த முடிவு எடுத்தாலும் தலையாட்டிக்கொண்டே இருந்ததால்தான் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக போராடிவந்த தமுமுக, அரசியல் கட்சி துவங்கும் நிலை வந்தது.
இறைவனின் பெரும் கிருபையால் சிறப்பாக அரசியல் நடத்துகிறது, அதுவும் முக்கியமாக தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று மதிப்போடு சட்டமன்றத்தில் நுழைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. அந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள் எல்லாம் [சில கட்சியில் இருப்பதை போல்] பணக்காரர்கள் என்ற காரணத்திற்காகவும் கவரவத்திற்காகவும் நிர்வாகிகளாக இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் மக்களுக்காக போராடும் களத்தில் இருப்பவர்கள்.
எனவே என்று இதுபோல் மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி முஸ்லிம் லீக் போராடுகின்றதோ அன்று தான் அது மக்கள் செல்வாக்கு பெரும் கட்சியாக மீண்டும் மாறும். இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross