நாம தாங்க இது போன்ற சேவைகளை பயன்படுத்துவதில்லை. posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[11 January 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15821
~~~இது கடந்த ஆண்டை விட 1,482 பேர் குறைவாகும். இதற்கான காரணம் அறிந்து, அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.~~~
யாரு இந்த காரணத்தை எல்லாம் அறிய? என்னத்தே நடவடிக்கை மேற்கொள்ள?
நோயாளர் நலச்சங்கதினரிடம் அன்பான வேண்டுகோள்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீங்க கொஞ்சம் மனசு வச்சால் மேல் குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கும் விடை காணலாம். இந்த விஷயங்களில் இன்னும் அக்கறை எடுப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம்
மேலும் உங்கள் சங்கம் இன்னும் நன்றாக செயல்பட்டு நம்ம மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் பணியமர்த்துவதற்கான வேலைகளையும் பாருங்கள். அத்துடன் நீங்கள் செய்த உதவிகளையும் நாம் மனமார பாராட்டுகிறோம்.
குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் கூட நம் அரசு மருத்துவமனைகளை பயன் படுத்த தயங்குவதுடன், பணமே குறிக்கோளாக கொண்டுள்ள மற்று மருத்துவ சேவைகளுக்கு பின்னால் போகிறார்கள். அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வு கொடுக்கவும் அன்பாய் வேண்டுகிறோம்.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் MALABAR KAYAL WELFARE ASSOCIATION (MKWA) இது போன்ற ஒரு செயல் திட்டத்தில் இறங்கியுள்ளது. இவர்களுடன் இணைந்து இது மாதரியான திட்டத்தில் செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்குமென நாம் நம்புகிறோம்.
~~~இதன்மூலம், நோயாளர்கள் தமிழ்நாட்டில் எந்த அரசு மருத்துவமனையிலும் அவர்களின் முந்தைய நோயின் தன்மை அறிந்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.~~~
இந்த வசதியெல்லாம் பெரிய பெரிய தனியார் மருத்துவ மனைகளில் கிடக்கும் சேவைகள் ஆகும். இது நம்ம அரசு மருத்துவ மனையில் இருக்குதுதாமே? நாம தாங்க இது போன்ற சேவைகளை பயன்படுத்துவதில்லை.
ஆகையால் அன்பார்ந்த காயலர்களே,
நமக்காக நம்முடைய வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவமனைகளை தாராளமாக பயன்படுத்துங்கள். குறைகள் இருப்பின் நாமே முயற்சி செய்து அதை சரி செய்யவும் பழக வேண்டும். முடிவாக எங்களுக்கு தாங்க முடியாத நோய்களை தந்து கஷ்ட்ட படுத்தாதே யா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross