Re:DCW ஆலை விரிவாக்கத்தின் வ... posted byRayyan's Dad!! (USA)[12 January 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 15878
என்னுடைய முந்திய பதிவில் ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டேன். சமீப காலமாக ஊர் பொதுப்பிரச்சனை மற்றும் சமுக சேவை தொடர்பான செய்திகளில் (அதிலும் குறிப்பாக இந்த செய்தியை), நிறைய புதியவர்கள் (அதிலும் குறிப்பாக இளைகர்கள்) தங்களுடைய அழகான மற்றும் ஆணித்தரமான கருத்தை 'ஒலிவாங்கி' யை பிடித்து உரைத்ததை படிக்கும் போது...எனது மனதில் தோன்றியது.
பொதுவாக நமதூரில் எதாவது ஒரு பொதுப்பிரச்சனை என்றால் ஒரு சில குறிப்பிட்ட பெரியவர்கள் மற்றும் "காயல்" கள் தான் 'ஒலிவாங்கி' யை பிடித்து தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள் அல்லது கருத்து தெரிவிக்க/பேச அழைக்க படுவார்கள். ஆனால் இன்று நாம் காணுகிற நிலைமையோ வேறு. ஒரு சிலர்தான் கருத்து சொல்ல முடியும் அல்லது சபையில் பேச முடியும் என்ற நிலைமை மாறி... எவரிடமெல்லாம் விஷயம் இருக்கிறதோ (சாமானியரா இருந்தால் கூட) அவர்கள் எல்லாம் சபையில் 'ஒலிவாங்கி' யை பிடித்து, தங்களுடைய ஆழமான/சமுக அக்கறை உள்ள கருத்தை கூறும் வாய்ப்பை இந்த காலகட்டம்/தலைமுறை வழங்கியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன். நல்லதொரு மாற்றம்...நாளைய சமுதாயத்தின் நல்லதொரு முன்னேற்றம்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross