செய்தி: பருவ மழையால் சேதமுற்றுள்ள முக்கிய சாலைகளை சரிசெய்ய, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளரிடம், நகர்மன்றத் தலைவர் நேரில் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[12 January 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15877
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நெடுஞ்சாலைத்துறைக்கு பாத்தியப்பட்ட மெயின்ரோடு குண்டும், குழியுமாக இருப்பதும் அதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே.
--------------------------------------------
பாதிப்பை நேரிடையாகவே உணர்கிறோம் :
கடந்த ஒரு வாரகாலமாக தினமும் காலை, மாலை என்று KMT மருத்துவ மனைக்கு ஓர் அலுவல் விசயமாக மோட்டார் சைக்கிளிலும், சில சமயம் ஆட்டோ ரிக்ஷாவிலும் நாங்கள் சென்று வருகிறோம் - அதனால் பாதிப்பை நேரிடையாகவே உணர்கிறோம்.
மழை பெய்ததின் காரணமாக ரோட்டில் உள்ள குழிகள் விரிவடைந்துக்கொண்டே போகிறது இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது .
இருசக்கர வாகனம் , ஆட்டோ ரிக்ஷாக்களில் செல்கிற மக்களுக்கு உடைகள் எல்லாம் நாசமடைகிறது.
KTM தெருவிலிருந்து KMT மருத்துவமனை போகும்போது தாயிம் பள்ளியை தாண்டியதும் ஏறத்தாழ 25 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது - அதனால் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்து மக்களுக்கு சேவை செய்வது நல்லது - அது அவர்களின் கடமையும் ஆகும்.
--------------------------------------------
குண்டுமில்லை , குழியுமில்லை :
KTM தெரு வழியாக போய் வருவதில் பல சிரமம் இருப்பதால் புதிதாக போடப்பட்ட அலியார் தெரு வழியாக சென்று வருகிறோம் - இந்த புதிய ரோடாவது வசதியாக உள்ளதா ? என்றால் இல்லவே இல்லை.
KTM தெருவில் குண்டும், குழியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது - அலியார் தெரு புதிதாக போட்ட ரோட்டில் குண்டுமில்லை , குழியுமில்லை ஆனால் 8 - 10 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது ஒன்றிரண்டு இடமில்லை 7 இடங்களில் .
ரோடு போட்டு முடிந்து ஒரு மாதமாகவில்லை - அதன் தரம் இப்படி இருந்தால் - அதை யாரிடம் போய் சொல்வது?.
--------------------------------------------
ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் :
நகராட்சி தலைவர், வட்டார போக்குவரத்து அலுவலர் - திருச்செந்தூர் மற்றும் உதவி பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை திருச்செந்தூர் ஆகியோருக்கு மனு கொடுத்து ஒரு மாதகாலமாகியும் நடவடிக்கை எடுக்காததால் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளருக்கு மனு கொடுத்து இருப்பதும், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அத்துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு அவ்விடத்திலேயே கோட்டப்பொறியாளர் உத்தரவிட்டதாகவும் செய்தியை படிக்கும்போது மகிழ்ச்சியாகவே உள்ளது.
நகராட்சி தலைவர் மக்களுக்கு சேவை செய்வதற்காக பல வழிகளிலும் போராடி வருகிறார் அதில் எந்த குறையுமில்லை / தளர்வுமில்லை.
இருந்த போதிலும் ஒன்றை மட்டும் நினைவில் நிறுத்த வேண்டும் - இன்றைய காலத்தில் எந்த ஒரு பெரிய அதிகாரியையும் சொன்னதை செய்திடுவார் என்று நம்பி சும்மா இருந்துவிடல் ஆகாது என்பதை.
காரணம் அதிகாரி நல்ல நேர்மையானவராக இருக்கலாம், அவருக்கு கீழ் உள்ளவர்களும் நேர்மையானவர்களாக இருக்கலாம் இருந்தாலும் காலசூல்நிலை நாம் கொடுத்த வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு இடையூறாகி நம்முடைய வேண்டுகோள் காலதாமதமாகவோ அல்லது மறக்கப்படவோ செய்யலாம்.
அதனால் நாம்தான் நம் வேண்டுகோள் நிறைவேற்றப்படும் வரை அவர்களை தொடராக தொடர்பு கொண்டு ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
எனவே ஞாபகமூட்டலை தாங்களும் நமது உறுப்பினர்களும் சேர்ந்து செய்தாலே முழு வெற்றியை அடையலாம்.
தங்களுடைய நற்செயல்களுக்கு நிச்சயமாக பயனுண்டு என்பதை மறந்திட வேண்டாம் - வல்ல அல்லாஹ்! தங்களுக்கு வெற்றியைத்தருவான் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross