சூட்டைத் தணிக்க தண்ணீர் தொட்டியில் சுகமான குளியலும் (மார்கழி,தை மாதம் எங்கே சூடுங்கோ???) குளித்தும், posted byசட்னி ,செய்யது மீரான்,, (ஜித்தா.....சவுதி அரேபியா.)[17 January 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16013
அஸ்ஸலாமு அலைக்கும்...
பயண ஏற்பாட்டாளர் அருமைத்தம்பி,
ஆசிரியர் அஹ்மத் மீராத்தம்பி அவர்கள்
சட்டையை கழற்றி சட்டியில் பொறுப்புடன்
நின்று சமையல் செய்வது காண சிறப்பு...
கற்றும்கொடுப்போம், கம்பையும் எடுப்போம்
கண்டிப்புடனும் இருப்போம், கச்சையும் கட்டுவோம்
அத்தோடு கரண்டியும் பிடிப்போம்
என்பதை காட்டிவிட்டிர்கள் ஆசான் பெருமக்களே பாராட்டுக்கள் ..
வகுப்பறை, மாணவர்கள், புத்தகம், தேர்வு, வினாத்தாள் மற்றும் டியூஷனும் என சேர்த்தும் எந்நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஒரு மாற்றத்திற்கு புத்துணர்வு முகாம் பசுமை படர்ந்த தோப்பிற்கு சிற்றுலா சென்றும், காயல்பட்டினம் ஸ்பெஷல் களறி சாப்பாடு மதிய உணவாக தாங்களாக சமைத்துப் சாப்பிட்டும், சூட்டைத் தணிக்க தண்ணீர் தொட்டியில் சுகமான குளியலும் (மார்கழி, தை மாதம் எங்கே சூடுங்கோ???) குளித்தும், சிறிது நேரம் சிறுபிள்ளைகளாக மாறி ஓடியாடி உற்சாகமாக விளையாடியும், அனைத்து அம்சங்கள் குறித்து அரட்டையடித்து கொண்டும்
சிறப்புடன் நிறைவு செய்து திரும்பியதும் மகிழ்ச்சி...
ஐயாமார்களா நீங்க மகிழ்ச்சியாக இருந்தால்தானே உங்களிடம் நாங்க படிக்க அனுப்பும் எங்க பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருப்பங்கோ சாரே ... வாழ்க வளமுடன்...எல்லா ஆசரியர்களும்......
உங்கள் இந்த அணியில் எங்கள் அன்பு தம்பிமார்கள் புது மாப்பிள்ளைகள் எம்.எம்.எஸ்.ஹனிபா சார், சூபி சார் இருவரும் இல்லையே மேலிடத்தில் விடவில்லையோ????
அண்மையில் மணவிழா கண்ட உங்கள் இருவருக்கும்
எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்... பாரக்கல்லாஹ் ஹைரா. ஆமீன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross