Re:காயல்பட்டினம் நகராட்சியில... posted byMohamed Adam Sultan (kayalpatnam)[25 January 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 16211
நகராட்சியில் மாதம்தோறும் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்ற நல்ல நடவடிக்கைக்கு நன்றிகள் பல
மனுவாயிலாகவும்,இந்த இணையத்தளம் வாயிலாகவும் நகராட்சி தலைவி அவர்களுக்கு அலியார் தெரு வாசிகளின் ஒரு வேண்டுகோள்.(விபரம் கீழே}
பெறுனர் .
நகராட்சி மன்ற தலைவர்
காயல் பட்டணம் நகராட்சி
அனுப்புனர்
அலியார் தெரு வாசிகள்
பொருள் வேகத்தடை அமைதல்
காயல் பட்டணம் நகராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!
எங்கள் அலியார் தெருவின் தென் பகுதியிலுள்ள நான்கு வழிசந்திப்பானது, அதிகமான போக்குவரத்துக்குரிய முக்கிய சாலையாக ,
தாயும் பள்ளிலிருந்து கிழக்காகவும், அலியார் தெருவிலிருந்து தென்வடலாகவும் செல்லக்கூடிய முக்கியமான பரபரப்பான போக்குவரத்து பாதையாக அமைந்துள்ளதால்,அப் பகுதியை கடக்க முயலும் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டியுள்ளது.
ஏனனில்,அவ்வழியே செல்லும் நான்கு சக்கர வாகனம் முதல் இரு சக்கர வாகனம் வரை மிகவும் வேகமாக ஓட்டி செல்கிறார்கள்.
குழந்தைகளும்,முதியவர்களும்,ஆய்ஷா சித்திக்கா கல்லுரி மாணவிகளும்,மற்றும் கல்லுரி பள்ளிகளுக்கு செல்லும் அணைத்து மாணவ,மாணவிகளும் அந்த நான்கு முனை சந்திப்பையையேஉபயோகபடுத்துகிறார்கள்.
குறிப்பிட்ட அந்த பகுதியான சரவணன் மளிகை கடைக்கு பக்கத்திலும்,முஹம்மது ஆதம் சுல்தான் அவர்களின் முக்கு வீட்டிற்க்கு பக்கத்திலும் உள்ள பகுதில் வேகத்தடை அமைத்து தரும்படி அலியார் தெரு மக்கள் சார்பாக வேண்டி கொள்கிறோம்.எங்கள் வேண்டுகோளை ஏற்று ஆவன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இவண்
அலியார் தெரு வாசிகள் சார்பாக
முஹம்மது ஆதம் சுல்தான் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross