Re:கே.டி.எம். தெரு பெண்கள் ஓ... posted byALS maama (Kayalpatnam)[25 January 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 16212
அஸ்ஸலாமு அலைக்கும்,
பெரிய நெசவுதெருவுக்கும் K.T.M தெருவுக்கும் பின்னால் உள்ள பெண்கள் வோடை 30 ஆண்டுகள் அகற்றப்படாத குப்பை மலைபோல் இருந்தது, அகற்றும் பனி சத்தம் கேட்டு எங்கள் வீட்டு தோட்டத்தின் பின்பகுதியை எட்டிப் பார்த்தேன். 11 வது வார்டு கௌன்சிலர், துணை தலைவர் முகமூடி போட்டவாறு துப்புரவு பணிகளை கவனித்தார், நானும் போய் பார்த்தேன். இந்த வோடையில் ஒரு காலத்தில் பெண்கள் நடந்து கடைத்தெருவுக்கு பயமின்றி போவார்கள். அவரவர் வீட்டிற்கு பின்பகுதியில் பெண்கள் நடந்து செல்ல அந்த காலம் முதல் விசாலமான இடமாக இருந்தது, இன்று பலர் தங்களது வீட்டிற்காக இப்பாதையை அடைத்துக் கட்டி பெண்களை போகவிடாமல் அரசு நிலத்தை அபகரித்துள்ளார்கள் இது எந்த வகையில் நியாயம் ?
இந்த வழியில் தான் மழைகால நீர் போகும் வோடயாகவும் இருந்தது. இந்த வோடையில் சிலர் செப்டிக் டேங்களை கட்டியுள்ளார்கள், இதனால் குப்பை வண்டிகள் வரமுடியவில்லை . அந்த செப்டிக் டேங்களை உடைத்து கற்களை குவித்து மீண்டும் பெண்கள் பாதையாக ஏற்ப்படுத்தி தரலாம். சகோதரி, தலைவி ஆபிதவின் நடவடிக்கை ஊர் முழுவதிலும் உள்ள பெண்களும் அவர்களோடு இணைந்த ஆண்களும் என்றும் மறக்க மாட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross