Re:தினமும் ஐந்தரை மணி நேரம் ... posted byMauroof (Dubai)[29 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16329
தமிழகத்தின் தற்போதைய மின்சார தேவையை சமாளிக்கும் வகையில் முத்துவேலர் கருணாநிதி தலைமையிலான சென்ற திமுக ஆட்சியில் போதிய திட்டங்கள் ஏற்படுத்தப்படாமல் போனதே காரணம்.
இக்குறையை தீர்ப்பதே ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் தலையாய பனியாக இருக்கும் என தனது தேர்தல் பரப்புரையிலேயே தெரிவித்திருந்தார்கள். அதை செயல்படுத்தும் விதமாக போதிய உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்காக போதிய நிதி தமிழக அரசிடம் இல்லை என்பதால் மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திட முடிவு செய்துள்ளது கழக ஆட்சி.
இந்த உயர்வும் போதுமானதன்று. மாறாக இருக்கவே இருக்கு உலக வங்கி கடன் தருவதற்கு. பொதுமக்களாகிய நீங்கள் இந்த விலையேற்றம் குறித்து அச்சப்பட தேவை இல்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலத்தை ஒப்பிடும்போது உயர்தப்படவிருக்கும் மின்சார கட்டணமோ அல்லது உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணமோ தமிழகத்தில் மிக குறைவே. எனவே கடந்த காலங்களில் தமிழக மக்கள் இது போன்ற ஒப்பீட்டு விலை ஏற்றங்களுக்கு விரும்பியோ விரும்பாலோ ஒத்துழைப்பு தந்தது போன்று தற்போதும் ஆதரவு தாருங்கள்.
உங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் 5 வருடத்திற்கு பிறகு ஆட்சியை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த விலை ஏற்றம் குளிர்சாதன பெட்டி, காற்றுப் பதனி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி போன்ற சொகுசு உபகரணங்கள் பயன்படுத்துவோரை மட்டுமே சிறிது பாதிக்கும் என்று சொன்னால் அது மிகை ஆகாது. வாழ்க தமிழக மற்றும் அனைத்து பகுதி இந்திய மக்கள். வளர்க தமிழகம் மற்றும் அனைத்திந்திய அரசியல்வாதிகள் மற்றும் திருவாளர் பண(ஜன)நாயகம்.
இந்த கருத்து யாரையும் புண்படுத்தாது என நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross