Re:ரியாத் கா.ந.மன்ற பொதுக்கு... posted bymackie noohuthambi (colombo)[17 February 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17013
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே, ஏதோ ஒன்றை இழந்தது போலே, ஏதோ ஒன்றை தொலைத்தது போலே........ஆம்.
1994 முதல் 1999 வரை நான் துணைதலைவராக பணியாற்றிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன. படத்திலே பார்க்கும்போது எனது தம்பியும் அங்கு வருவது ஆச்சரியமாக இருக்கிறது. முன்னாள் தலைவர்கள் துனைதலைவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஏதும் ஏற்படுத்தி எங்களையும் கை தூக்கி விடலாமே, எனது கோரிக்கையை அடுத்த கூட்டத்தில் முன்மொழியும் படி ஷைக்னா ஆலிம் மஹ்லரி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
வெளிநாட்டில் இருக்கும்போது காயல்பட்டினம் வாசி என்ற உணர்வு ஊர் வந்ததும் மறைந்து விடும் மாயம் என்ன. விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் பிறருக்கு உதவும் மணாப்பான்மை எல்லாம் விடைபெற்றுக்கொள்கிறதே இவற்றை சமீப காலமாக ஊரில் நடக்கும் நிகழ்சிகள் நமக்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறதே, இது உங்களுக்கு வேதனை தரவில்லையா, தெரு முஹல்லாஹ் அக்கீதா என்ற மாயைகளில் சிக்கி நமது மக்கள் சின்னாபின்னமாகி அந்நியர்கள் முன்னாள் கேவலப்படும் அவல நிலையை போக்க நீங்கள் ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாமா,
உலகளாவிய அளவில் அமைந்துள்ள காயல்நல மன்றங்கள் இதில் தலையிட்டு ஒரு ஒற்றுமை நிலையை ஏற்படுத்தவில்லை என்றால். நீங்கள் செய்யும் இதர உதவிகளும் நல்ல பயன்களை தருமா என்ற சந்தேகம் என் போன்றவர்களுக்கு ஏற்படுகிறது ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross