Re:சங்கரன்கோவில் தொகுதி இடைத... posted bymackie noohuthambi (colombo)[17 February 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 17014
இந்த தேர்தலில் அண்ணா திமுக திமுக தேமுதிக மதிமுக, காங்கிரஸ் எல்லோரும் தனியாக நின்று அவரவர்களின் வலிமையை தெரிந்து கொள்வது நல்லது. அடுத்த ஆளின் தோள் மீது ஏறி சவாரி செய்யும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
கூட்டணி என்பதெல்லாம் அண்ணாவுடன் முடிந்து விட்டது. கொள்கையில்லாமல், சொரணை இல்லாமல் வோட்டுக்காக கூட்டு சேருவதும் அதன்பிறகு மானம் மரியாதை இழந்து வேதனைப்படுவதும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கையாக போய்விட்டது. மக்களும் மடையர்களாக இருந்து இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு ஆட்டம்போட்டு அலுத்து விட்டார்கள்.
வைகோ அவர்கள் எப்படியாவது சட்டமன்ற உறுப்பினராக வந்து அவரது குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. பாராளுமன்றத்தில் கேட்ட குரல் அப்படியே ஒடுங்கிவிட்டது. வெறும் உணர்சிகளை கொட்டி பேசுவதும், தமிழ் இனத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும் எத்தனை நாளைக்கு நடக்கும். கலைஞர் அவர்களின் போர்வாளாக இருந்தவர். இப்போது மாறி வரும் அரசியல் சூழலில் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும். கலைஞரும் மறப்போம் மன்னிப்போம் என்று கூறி அவரை அணைத்துக்கொண்டால் நல்லது.
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம், தீராத கோபம் யாருக்கு லாபம். SELECTIVE AMNESIA உள்ள அத்வானி அவர்களும் அப்படி அவருக்கு இருப்பதாக வெளிப்படையாக அறிவித்த புரட்சி தலைவி அவர்களும் கூட்டு சேர்ந்து 2014 தேர்தலை சந்திக்க வியூகம் வகுக்கும்போது, ஒரே தலைவனின் தம்பிமார்கள் ஒன்று சேர்வதில் தவறில்லை. மக்களும் மன்னிக்க தயாராக இருக்கிறார்கள்.செய்வார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross