Re:சா....ர்! என் படிய காணோம்... posted byMauroof (Dubai)[21 February 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 17097
தலைப்பு சிரிப்பை வரவழைக்கிறது என்றாலும் செய்தியின் உள்ளே கூறப்பட்டிருக்கும் நடப்பு உண்மையிலும் உண்மை. இவ்வாறு புதையுண்டு போவதற்கு அறிந்தோ அறியாமலோ நாமும் ஒரு காரணகர்த்தாவாகவே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றோம் இன்னும் கூட இருக்கின்றோம்.
எவ்வாறு என்று கேட்டால் அதற்கான பதில் "நமக்கென்ன, நமக்கேன் வம்பு" உனக்கேன் இந்த வேண்டாத வேலை" உன் தெருவா, உன் வீடா" உன் பணமா என்று புதையுண்டு போகும் அளவிற்கு சாலைகள் போடப்படும்போது அல்லது சாலைகளில் சுயநலத்தின் காரணமாக மண் மற்றும் கற்குவியல்கள் கொட்டி மேடு அமைப்பது போன்றவைகளை தட்டிக்கேட்டு சரி செய்யவேண்டும் என்ற முனைப்போடு செல்வோரை தடுத்து நிறுத்துவதுதான். புதிய நகர்மன்றம் இது விஷயத்தில் போதிய அக்கறை செலுத்த வேண்டும்.
அட்மின் அவர்களுக்கு நன்றி. இது போல போக்குவரத்து சாலைகளில் தேவையில்லாது படிந்திருக்கும் மனற்குவியல்களினால் ஏற்படும் "மாசு" பற்றியும் அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் ஒரு செய்தி வெளியிட்டு மக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் விழிப்புணர்விற்கு வித்திடுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross