Re:தொடர் மின்வெட்டைக் கண்டித... posted byMohammed Ismail Buhari N.T. (Chennai)[06 March 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 17522
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்து அனைவரின் ஆதரவோடு ஒருநாள் அடையாள கடை அடைப்பு நடத்தி உணர்வுகளை உரியவர்கள் புரிந்துக்கொள்ள செய்தமைக்கு லீகுக்கு வாழ்த்துக்கள். ஒத்துழைத்த வணிகர்களுக்கு நன்றிகள்.
விரைவில் கூடங்குளம் மின் ஆலை திறக்கப்பட அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். சுமார் பதினான்காயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டும் இன்னும் இழுபறிதானா? மின்சாரம் இல்லாமல் புளுங்குவதுடன் பல்லாயிரம் கோடியை உதயகுமாருக்கு மொய் எழுதவா வேண்டும்? ஏற்கனவே இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் சேது சமுத்திர திட்டத்தில் கடலில் போட்டாச்சு. பலனை கண்டப்பாடில்லை. கோடி கோடியாய் கொட்டிவிட்டு ஒருசில சுயநல கிருமிகளுக்காய் விவேகமின்றி வாய் பொத்தி இருப்பது ஓர் நல்ல அரசுக்கு அழகல்ல. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross